Karthick: கார்த்திக்கை பத்தி என்ன தெரியும் உங்களுக்கு? பொங்கி எழுந்த ராதாரவி
சமீபகாலமாக நடிகர் கார்த்திக்கை பற்றி பல்வேறு விமர்சனங்கள் பத்திரிக்கைகளில் வர தொடங்கியிருக்கின்றன. அவரால் தயாரிப்பாளர்கள் நஷ்டமடைந்தனர் என்றும் கால்ஷீட் ஒழுங்காக கொடுக்க மாட்டார் என்றும் கார்த்திக்கை பற்றி பல விமர்சனங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. அதுவும் நடிகரும் இயக்குனருமான பாரதிகண்ணன் எதேச்சையாக சொன்ன விஷயம் அது பூதாகரமாக மாறியது.
இதை பற்றி பிரபல நடிகர் ராதாரவி சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இதில் பாரதிகண்ணன் கார்த்திக்கை பற்றி பேட்டிகளில் கூறிய பிறகு ராதாரவி பாரதிகண்ணனுக்கு போன் செய்து வருத்தப்பட்டதாகவும் பாரதிகண்ணன் கூறியிருந்தார். அதாவது ஏன் கார்த்திக்கை பற்றி இப்படி பேசுகிறீர்கள் என்று ராதாரவி கேட்டதாக பாரதிகண்ணன் கூறியிருந்தார்.
ராதாரவியை கார்த்திக் பாட்னர் என்றுதான் அழைப்பாராம். ஆரம்பகாலங்களில் இருந்து இருவருமே பாட்னர் என்று அழைத்துதான் பேசி பழகியிருக்கிறார்கள். பாரதிகண்ணன் ஏதோ போற போக்கில் கார்த்திக்கை பற்றி சொல்லிவிட்டார். ஆனால் அதன் பிறகு சில யூடியூப் சேனல்கள் தொடர்ந்து கார்த்திக்கை பற்றி பேச ஆரம்பித்துவிட்டனர். கார்த்திக்கை பற்றி இப்பொழுது பேசுகிறவர்கள் ஏன் அப்பவே எதும் சொல்லவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் ராதாரவி.
ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருப்பது போல மனுஷனுக்கு இரண்டு முகம் இருக்கிறது . அப்படித்தான் கார்த்திக்கும். நடிகர் சங்கத்திற்காக இந்நாட்டு மன்னர்கள் என்ற படத்தை எடுத்தார்கள். அதில் கார்த்திக், பிரபு, சத்யராஜ் என அப்போதுள்ள முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். ஆனால் அந்தப் படத்திற்கு கார்த்திக் உட்பட யாருமே சம்பளம் வாங்கவில்லையாம். ஃப்ரீயாகவே நடித்துக் கொடுத்திருக்கின்றனர்.
அதை போல் ராதாரவி இது நம்ம பூமி என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இந்நாட்டு மன்னர்கள் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது ராதாரவி அந்த ஸ்பாட்டுக்குபோயிருக்கிறார்.அப்போது தெரிந்தவர் ஒருவரிடம் இது நம்ம பூமி படத்தை ரிலீஸ் செய்ய இரண்டரை லட்சம் தேவைப்படுகிறது என ராதாரவி புலம்பி கொண்டிருந்தாராம். இதை எப்படியோ கேட்ட கார்த்திக் தன் மேனேஜரிடம் அந்த இரண்டரை லட்சத்தை கொடுத்து ராதாரவியிடம் கொடுக்க சொல்லியிருக்கிறார்.

இது ராதாரவிக்கு பெரிய ஷாக்கிங்காக இருந்திருக்கிறது. அதன் பிறகு அதை ஈடுசெய்ய இது நம்ம பூமி படத்தின் கோயம்புத்தூர் ஏரியாவை கார்த்திக் வாங்கிக் கொண்டாராம். அதனால் தேவையில்லாமல் யூடியூப்பில் கார்த்திக்கை பற்றி இப்போது செய்திகள் வருகிறது. இப்போது அது தேவையில்லை. கார்த்திக்கை பொறுத்தவரைக்கும் சைலண்டா இருக்கிற மனிதன். உதவி செய்கிற மனிதன் என்றும் ராதாரவி அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
