×

அந்த தேவைக்கு தான் திருமணம் செய்துக்கொண்டேன் - ஓப்பனாக கூறிய ராதிகா ஆப்தே!

ரகசியத்தை உடைத்த நடிகை ராதிகா ஆப்தே

 
பொதுவாக சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த ரகசியங்களை தெரிந்துக்கொள்வதில் அவரது ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவதுண்டு அந்தவகையில் பிரபல பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியொன்றில் தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசினார்.

அப்போது தனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கையில்லை என்று தெரிவித்த அவர் தனக்கு விசா பெறுவதில் பிரச்னையாக இருந்தது என்றும் இதனால் லண்டனை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துக்கொண்டால் எளிதாக விசா பெற்றுவிடலாம் என்று எண்ணி தான் திருமணம் செய்துக்கொள்ள சம்மதித்ததாக தெரிவித்துள்ளார்.

வேலூரில் பிறந்து பூனாவில் வளர்ந்த  ராதிகா ஆப்தே பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் தோனி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன்பின் ஆல் இன் ஆல் அழகுராஜா, ரஜினிக்கு ஜோடியாக கபாலி திரைப்படத்தில் நடித்தார். பாலிவுட்டில் பரபரக்கும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வரும் ராதிகா ஆப்தே.

ஒரு சில படங்களில் ஆடையே போடாமல் கூட நடித்திருக்கிறார். இதனால் கதைக்கு சம்மதம் இல்லாமல் கவர்ச்சியாக நடிக்க சொல்லும் கதைகளாக வருகிறது என கூறி அது போன்ற படவாய்ப்புகளை மறுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் அவரது இந்த பேட்டி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News