×

ஐந்தாறு ஆண்டுகள் பொறுங்கள்... கடுப்பில் ராதிகா ஆப்தே.. என்ன சேதி தெரியுமா?

ஓடிடி தளங்களுக்கு சென்சார்ஷிப் விஷயத்துக்கு எதிராக நடிகை ராதிகா ஆப்தே கொதித்திருக்கிறார்.
 
ஐந்தாறு ஆண்டுகள் பொறுங்கள்... கடுப்பில் ராதிகா ஆப்தே.. என்ன சேதி தெரியுமா?

லாக்டவுன் காலத்தில் தியேட்டர்கள் மூடப்படவே, ஓடிடி தளங்களுக்கான வரவேற்பு அதிகரித்தது. லாக்டவுனால் ரிலீஸ் பண்ண முடியாத படங்கள் பலவும் ஓடிடியில் நேரடியாக ரிலீஸாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று படம் மெகா ஹிட்டடித்தது. 


அடுத்தடுத்து வெப் சீரியஸ், ஓடிடி தளத்துக்கென பிரத்யேக படங்கள் என வேகமெடுத்தது பிசினஸ். அதேநேரம், சென்சார்ஷிப் இல்லாமல் அதிக வன்முறை மற்றும் ஆபாசக் காட்சிகள் ஓடிடியில் இடம்பெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஓடிடி தளங்களுக்கும் சென்சார்ஷிப் கொண்டுவரப்படும் என மத்திய அரசு அறிவித்தது. 


இந்தநிலையில், ஓடிடி சென்சார்ஷிப் குறித்து நடிகை ராதிகா ஆப்தே பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், ``கருத்து சுதந்திரத்துக்கும் சகிப்புத் தன்மைக்கும் இடம்கொடுக்க வேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் பயணிக்கும் பாதை குறித்த சோகமும் பயமும் இருக்கிறது. ஓடிடி தளங்களால் நிறைய வேலைவாய்ப்பு உருவாகியிருக்கிறது. இது எந்த இடத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஐந்தாறு ஆண்டுகள் பொறுத்திருங்கள்’’ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். 
 

From around the web

Trending Videos

Tamilnadu News