Categories: Cinema News latest news

இந்த மாதிரி பிரபலங்களால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன்… மனம் திறந்த ரஜினி பட நடிகை…!

தமிழில் தோனி ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற படங்களில் நடித்திருந்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. அதன் பின்னர் தமிழ் படங்களில் தலை காட்டாத ராதிகா தற்போது விக்ரம் வேதா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இதுதவிர அடிக்கடி உச்சக்கட்ட கவர்ச்சியில் போட்டோ வெளியிடுவது, ஏதேனும் சர்ச்சையில் சிக்கிக் கொள்வது என வலம் வந்து கொண்டிருக்கும் ராதிகா ஆப்தே சமீபத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் தான் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறியுள்ளார்.

radhika apte

அதன்படி சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது, “கொரோனா காலத்தில் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். நான் நடிக்க விரும்பிய பெரும்பால படங்களுக்கான வாய்ப்பு மற்றவர்களுக்கு சென்றது. அவர்கள் தங்களை அழகாக காட்டுவதற்காக சிகிச்சைகள் மேற்கொண்டார்கள்.

இந்த ஒரு காரணத்திற்காக எனக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. பல நடிகைகள் தங்கள் அழகை பாதுகாக்க தொழில்நுட்ப வசதியுடன் பல்வேறு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார்கள். முதுமை என்பது அழகற்றது அல்ல என்பது இங்கு யாருக்குமே புரியவில்லை.

தங்களுக்கு வயதாவதால், தங்கள் முகத்தையும் உடலையும் மாற்றி அமைக்க பல அறுவை சிகிச்சைகள் செய்துகொண்ட நண்பர்கள் பலரை எனக்குத் தெரியும். வயதாவதால் அழகு குறைவதாக நினைத்து கொண்டு, சிகிச்சை செய்வர்களால் நான் என்னை சோர்வாக உணர்கிறேன். இருப்பினும் அதை மிகவும் சவாலாகக் காண்கிறேன்” என கூறியுள்ளார்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்