தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து சண்டைக்காட்சிகளுக்காகவே தன் படத்தை பார்க்க வரவழைக்கும் நடிகர் விஜயகாந்த். இவருடைய பெரும்பாலான படங்களில் இடம்பெற்றிருக்கும் சண்டை காட்சிகள் பார்ப்பதற்கு ரசிக்கும் படியாக இருக்கும்.
அந்த காலத்தில் எம்.ஜி.ஆர் என்றால் 80, 90களில் விஜயகாந்த் தான். ஆரம்பகாலங்களில் உருவ கேலிகளில் ஈடுபட்டு மிகவும் வருந்தியிருக்கிறார். அதன் காரணமாகவே வில்லன் கதாபாத்திரங்கள் தான் அதிகளவு இவருக்கு கிடைத்தது.
அதன் பின் தொடர்ச்சியான தனது முயற்சியால் வரிசையாக பல படங்களில் நடிக்க தொடங்கினார். எஸ். ஏ.சந்திரசேகரின் சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மூலம் இப்படி ஒரு நடிகர் இருக்கிறார் என்று தமிழ் திரையுலகிற்கு தெரிந்தது. வைதேகி காத்திருந்தாள் போன்ற படங்களின் மூலம் ரஜினிக்கு டஃப் கொடுக்கும் நடிகராக திகழ்ந்தார். பல நடிகைகளுடன் ஜோடி சேர்ந்த விஜயகாந்த் நடிகை ராதிகாவுடன் நிறைய படங்களில் நடித்துள்ளார்.
இருவரும் சேர்ந்து நடித்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் படங்களாக விளங்கியது. விஜயகாந்தை ஒரு நாகரீக மனிதனாக மாற்றியதே நடிகை ராதிகா தான் என்று பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரெங்கநாதன் தெரிவித்திருந்தார். விஜயகாந்த் காலத்தை ராதிகாவுக்கு முன் ராதிகாவுக்கு பின் என்றே பிரித்து பார்க்கலாம் என்றும் கூறினார்.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…