80களில் ஆரம்பித்து இன்று வரை தேடப்படும் நடிகையாகவே அறியப்படுகிறார் நடிகை ராதிகா. 80களில் ஆரம்பித்த இவரது பயணம் 95 வரை ஹீரோயினாகவே நடித்து வந்தார்.
1978-ஆம் ஆண்டு தமிழில் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார். இவரின் தமிழ் சினிமா வெற்றியை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து இந்திய அளவில் புகழ்பெற்றார்.
வெள்ளித்திரையில் இவரின் வெற்றியை தொடர்ந்து சின்னத்திரையிலும் கால் தடத்தை பதித்தார். ராடன் மீடியா என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவிய ராதிகா, பல தமிழ் திரைப்படங்களையும், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்து வருகிறார். நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து குடும்ப பொறுப்புகளையும் கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் எனக்கு வெட்கப்படவே தெரியாது என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மேலும் என்னுடைய முதல் படத்தில் என்னை வெட்கப்பட சொன்னார்கள். அவர்களிடமும் வெட்கப்பட தெரியாது என்று கூறினேன். அதற்கு அவர்கள் வெட்கப்படுகிற காட்சி வரும் போது குச்சியை வைத்து இடுப்பில் குத்துவார்கள். இதோ வருகிறது பார். இது தான் வெட்கம் என்று சொல்வார்கள். என்று ஒரு பேட்டியில் கூறினார்.
Idli kadai…
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…