இந்த கதைக்கு சூர்யா எப்படி ஓகே சொன்னாருன்னே தெரியல!.. ராதிகா அதிரடி பேச்சு!..
சூர்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான சில நாட்களிலேயே படம் ரூ.150 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படத்துக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா படக்குழு சார்பில் நேற்று நடைபெற்றது. அதில் சூர்யாவை தவிர படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய ராதிகா, படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்தார். சின்ன சின்ன குறைகள் இருந்தால்கூட ரசிகர்கள் அதை உடனடியாக கவனித்து கேள்வி எழுப்புவார்கள். ஆனால், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு இருந்ததால் ரசிகர்கள் படத்தை முழுமையாக ரசித்துள்ளனர். இதற்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் பங்களிப்பு முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் சூர்யா இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தது குறித்தும் ராதிகா சுவாரஸ்யமாக பேசினார். முதலில் இந்தக் கதையை சூர்யாவிடம் கூறினீர்களா, அவர் உடனடியாக நடிக்க சம்மதித்தாரா என்றுதான் வெங்கியிடம் கேட்டேன். பல முன்னணி நடிகர்களுடன் ஏற்கனவே பணியாற்றியுள்ளதால், ஒரு கதையை அவர்கள் எப்படி அணுகுவார்கள் என்பது எனக்குத் தெரியும். சூர்யா நடிக்க ஓகே சொல்லிவிட்டார் என்று வெங்கி கூறியதும், அவர் எப்படி இந்தக் கதைக்கு ஓகே சொன்னார் என்றுதான் கேட்டேன் என ராதிகா கலகலப்பாக பேசினார்.
மேலும், ஹீரோயினாக யாரை நடிக்க வைக்கப் போகின்றனர் என்கிற டவுட் இருந்துக் கொண்டே இருந்தது. டியூட் படத்தில் நடித்த மமிதா பைஜுவை சரத் ரொம்பவே பாராட்டிக் கொண்டிருந்தார். விஸ்வநாத் அண்ட் சன்ஸ் செட்டுக்கு வந்த உடனே மமிதா அங்கே இருந்ததும் டைரக்டர் ஹீரோயினை கரெக்ட்டாக கண்டு பிடித்து விட்டார் என நினைத்தேன் என்றார்.