இத்தோட நிறுத்திக்குவோம் - தாய் கிழவி குறித்து நடிகை ராதிகா!
தாய் கிழவி:
நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போட்ட திரைப்படம் தான் தாய் கிழவி. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ரிலீசான இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது .
தமிழ்நாட்டில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டியும் அவரது குடும்பத்தையும் சுற்றிய கதையாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் நடிகை ராதிகாவின் நடிப்பும் கெட்டப்பும் அனைவரது கவனத்தை ஈர்த்தது.
நடிப்பை நிறுத்துறேன்:

அதுவே படத்தின் வெற்றிக்கு மாபெரும் பலம் சேர்த்தது. இந்த நிலையில் தாய்க்கிழவி படத்தில் நடித்த அனுபவத்தை குறித்து நடிகை ராதிகா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதாவது ஒவ்வொரு வருஷமும் சினிமா நடிப்பு இது எல்லாத்தையும் இதோட நிறுத்திக் கொள்ளலாம் என்று நான் நினைக்கும்போது ஏதோ ஒன்னு என்னோட வாழ்க்கையை அப்படி திருப்பி போடும்.
இத்தனை வயதுக்கு பிறகும் கூட தாய்க்கிழவி எனக்கு ஒரு மாபெரும் வெற்றி கொடுக்க வைத்தது. இந்த சினிமா வாழ்க்கை எல்லாமே இயக்குனர் பாரதிராஜா எனக்கு கொடுத்த வாழ்க்கை பரிசு தான். அதனால அவருக்கு நான் மிகப்பெரிய நன்றி கடன் பட்டு இருக்கேன் என்று நடிகை ராதிகா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
