×

ராதிகா மகளா இது...? உடல் எடை குறைத்து ஜம்முனு ஆகிட்டாங்களே..!

நட்சத்திர ஜோடி ராதிகா - சரத்குமார் தம்பதிக்கு பிறந்த மகள் ரயன் கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுன் என்பவரை கடந்த 2016ல் திருமணம் செய்துகொண்டார்.அதையடுத்து அவர்களுக்கு கடந்த 2018ல் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

 

பின்னர் கடந்த மாதம் 15ம் தேதி தான் அழகிய பெண் குழந்தை பெற்றேடுத்தார் ரயன். மகளுக்கு அம்மாவின் பெயர் போன்றே பெயர்  "ராத்யா மிதுன்" என பெயர் வைத்துள்ளார். ரயன் அப்பா சரத் குமார் மீதும் அம்மா ராதிகா மீதும் அதீத அன்பும் பாசமும் வைத்துள்ளனர். அவரக்ளை யாரேனும் கிண்டல் செய்து ட்ரோல் செய்தல் கூட விடமாட்டார். ட்விட்டரில் வெளித்துகட்டிவிட்டு தான் மறுவேலை செய்வார். அந்த அளவிற்கு பெற்றோர்கள் மீது பாசமுள்ளவர்.

இந்நிலையில் தற்போது ரயன் தனது இன்ஸ்டாகிராமில் குழந்தை பிறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு எடுத்த போட்டோவையும் தற்போது இருக்கும் போட்டோவையும் ஒப்பிட்டு "லாக்டவுன் நேரத்தில் ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்ததாக மிகுந்த மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அவரது இந்த முயற்ச்சி பலருக்கும் நம்பிக்கை விதைத்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News