
Cinema News
பாக்கியராஜ் படத்துல நான் செஞ்ச பெரிய தப்பு… ஆனா யாரும் கவனிக்கல.. சீக்ரெட்டை உடைத்த ராதிகா!..
Published on
By
தமிழ் திரையுலகில் பல ப்ளாக்பஷ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனரும், நடிகருமான பாக்கியராஜ். அவர் இயக்கும் திரைப்படங்கள் அனைத்திற்கும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வந்தது. அப்போதெல்லாம் பாக்கியராஜின் அலுவலகத்திற்கு முன்பு ஒரு பெரிய கூட்டமே வாய்ப்பு தேடி காத்து கொண்டிருக்கும் என பலரும் கூறியதுண்டு.
பாக்கியராஜ் நடித்து இயக்கிய படங்கள் மிகவும் பிரபலமானவை. அவற்றில் தாவணி கனவுகள், முந்தானை முடிச்சி ஆகிய இரு திரைப்படங்களும் இப்போது வரை பிரபலமாக இருந்த படங்கள். தாவணி கனவுகள் திரைப்படமானது நடிகர் பாக்கியராஜுக்கும் முக்கியமான படமாக இருந்தது.
ஏனெனில் அந்த படத்தில்தான் முதன் முதலாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவருடன் நடித்தார். சிவாஜி கணேசனிடம் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள எனக்கு இந்த படம் உதவியாக இருந்தது என பாக்கியராஜ் ஒருமுறை தனது பேட்டியில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ராதிகா ஒரு பேட்டியில் கூறும்போது அந்த படத்தை குறித்து மற்றுமொரு சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்திருந்தார். தாவணி கனவுகள் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் ராதிகா. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது பாக்கியராஜை பார்த்தாலே ராதிகாவிற்கு சிரிப்பு வந்துவிடுமாம்.
radhika
இதனால் ராதிகா முடிந்தவரை பாக்கியராஜை பார்க்காமலேயே நடித்துள்ளார். அந்த மொத்த படத்திலும் எந்த ஒரு காட்சியிலும் ராதிகா பாக்கியராஜை நேருக்கு நேராக பார்க்கவே மாட்டாராம். ஆனால் இது படம் பார்க்கும் பலருக்கும் தெரியாது என ராதிகாவே கூறியிருந்தார்.
இதையும் படிங்க: சிவாஜி மாதிரி கூட இமிடேட் பண்ணிரலாம்! ஆனா இவர மாதிரி முடியவே முடியாது – யாருனு தெரியுமா?
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது....
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் அடித்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்கே...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் ஒரு தீவிரமான அஜித் ரசிகர். திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக...
Karuppu Movie: சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக...