தீபத் திருநாளில் திருவண்ணாமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்த ராகவா லாரன்ஸ்!..
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்குச் சென்ற நடிகர் ராகவா லாரன்ஸ், அண்ணாமலையாரை தரிசனம் செய்து வழிபட்டுள்ளார். அவர் கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவர் கடைசியாக நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது லோகேஷ் கனகரகராஜ் தயாரிப்பில் பென்ஸ் படத்தில் நடிக்கிறார். மேலும், ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 4 திரைப்படமும் உருவாகி வருவதாக ரொம்ப வருஷமாக கூறுகின்றனர். இதுதவிர,மகாவீர் கர்ணா, அதிகாரம் என சில படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கார்த்திகை தீபத் திருநாளில் அண்ணாமலையாரை தரிசிக்க ராகவா லாரன்ஸும் திருவண்ணாமலை சென்றுள்ளார். ஆன்மிகத்தில் ஆர்வம் கொண்ட அவர், கோயிலில் வழிபாடு நடத்தியது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
முன்னதாக நேற்று இசைஞானி இளையராஜா கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை வழிபட்டார்.
