மக்களுக்கு ஒன்னும் செய்யமுடியல.. உள்ள குத்துது!.. ராகவா லாரன்ஸிடம் புலம்பிய ரஜினி..

உடம்பு முடியல கண்ணா.. இத்தனை வருஷமா இந்த மக்கள் என்ன வாழ வச்சாங்க.. அவங்களுக்கு ஏதாவது திருப்பி செய்யணும்னு நினைச்சேன்
 
ragava lawrence

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். 1996ம் வருடம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து பேசியதால் ரஜினி அரசியலுக்கு வருவார் என மக்கள் எதிர்பார்த்தார்கள். அப்போது மட்டும் அவர் அரசியலுக்கு வந்திருந்தால் அவர் முதலமைச்சராக மாறியிருப்பார்.

ஆனால் அவரோ திமுகவை ஆதரித்து அதிமுகவை தோற்கடித்தார். அதன்பின், 25 வருடங்கள் நான் அரசியலுக்கு வருவது காலத்தின் கையில் என சொல்லி தான் நடிக்கும் திரைப்படங்களில் மறைமுகமாக அரசியல் வசனங்களை வைத்தார். எனவே தலைவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். சில வருடங்களுக்கு முன்பு நான் அரசியலுக்கு வருகிறேன் எனவும் அறிவித்தார்..

அதற்குள் கொரோனா வந்தபோது தன் உடல் நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரும் முடிவிலிருந்து பின் வாங்கினார். தற்போது விஜய் அரசியலுக்கு வந்து தமிழ்நாட்டிற்கு முதலமைச்சராகவும் மாறியிருக்கிறார். இந்நிலையில்தான், நடிகரும், ரஜினிக்கு மிகவும் நெருக்கமானவருமான ராகவா லாரன்ஸ் தற்போது வெளியிட்ட வீடியோவில் ஒரு முக்கிய தகவலை சொல்லியிருக்கிறார்.

ரஜினி சார் அரசியலுக்கு வர முடிவெடுத்தபோது அவருடன் நானும் இணையவேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால், அவரது உடல்நிலை அவருக்கு ஒத்துழைக்கவில்லை. அதனால்தான் அரசியலில் இருந்து விலகினார். அப்போது நான் அவரை பார்க்க போனேன். என்னிடம் ‘உடம்பு முடியல கண்ணா.. இத்தனை வருஷமா இந்த மக்கள் என்ன வாழ வச்சாங்க.. அவங்களுக்கு ஏதாவது திருப்பி செய்யணும்னு நினைச்சேன்.. முடியல.. உள்ள குத்துது கண்ணா.. என்ன பண்றதுனே தெரியல.. ரொம்ப கஷ்டமா இருக்கு’ என்று சொன்னார்..

அதற்கு நான் ‘அண்ணே உடம்புதான் முக்கியம்.. அரசியல் எப்ப வேணா செய்யலாம். நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை பாருங்கள்’ எனறு சொன்னேன்’ என லாரன்ஸ் கூறியிருக்கிறார்.

Tags

From Around the web