லோகேஷ் கனகராஜின் LCU படமான 'பென்ஸ்'... அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தயாராகும் ராகவா லாரன்ஸ்!
Jul 8, 2026, 14:01 IST
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் LCU-வில் இருக்கும் படம் 'பென்ஸ்'. இதில் கதையின் நாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.
'ரெமோ, சுல்தான்' ஆகிய படங்களின் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் தான் இதை இயக்கி வருகிறார். இதில் லாரன்ஸுடன் இணைந்து ரவி மோகன், நிவின் பாலி, சம்யுக்தா நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் கெளதம் ஜார்ஜ் ஒளிப்பதிவாளராகவும், சாய் அபயங்கர் இசையமைப்பாளராகவும், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்கள். தற்போது, இதன் ஷூட்டிங் 50 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ரவி மோகன் மற்றும் நிவின் பாலி ஆகிய இருவரின் காட்சிகளையும் படமாக்கி விட்டார்களாம். அடுத்த வாரத்தில் இருந்து அடுத்த கட்ட படப்பிடிப்பை துவங்கவுள்ளனர். இந்த ஷெட்யூலில் லாரன்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஷூட் செய்யவுள்ளனர்.
