கேட்கும்போதே டெரரா இருக்கே…காஞ்சனா 4 அப்டேட் கொடுத்த லாரன்ஸ்
தமிழ் சினிமாவில் ஹாரர் படங்களை காமெடி கலந்து கொடுத்ததில் முக்கிய பங்கு லாரன்ஸிற்கு உண்டு. அவரது முனியில் தொடங்கி காஞ்சனா, காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 ஆகிய படங்கள் திகில் மட்டுமல்லாமல் காமெடியும் கலந்து கொடுத்ததால் மாபெறும் வெற்றியை கொடுத்தன. இவரது பாணியைதான் சுந்தர்.சி முதற்கொண்டு பலர் பின் பற்றினர்.
இந்த நிலையில் காஞ்சனா சீரிஸில் 4ம் பாகத்தை சன் பிச்சர்ஸ் உடன் இணைந்து லாரன்ஸ் தயாரித்து வருகிறார். இப்படத்தில் லாரன்ஸுடன் பூஜா ஹெக்டே, நோரா ஃபதேஹி, கோவை சரளா, ஸ்ரீமன் உள்ளிட்டவ் பல்ரும் நடித்து வருகின்றனர். நீண்டகாலமாக தயாரிப்பில் இருக்கும் இப்படம் பற்றிய அப்டேடுகள் வந்தே பல மாதங்கள் ஆகின்றன. கிராபிக்ஸ் பணி அதிகமாக இருப்பதால் படம் வெளியாவதில் தாமதாகிறது என பலரும் கூறிவந்தனர்.
இந்த நிலையில் காஞ்சனா 4 குறித்த அப்டேட்டை லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், பயம் மற்றும் கூஸ்பம்ப்ஸ் நிறைந்த நிஜமான காம்பினேஷனை காஞ்சனா 4 படத்தில் உணரத் தயாராகுங்கள். ரத்தம் உறைய வைக்கும் இசையுடன் கூடிய பிரத்யேக அப்டேட்கள் விரைவில் வரும் எனத் தெரிவித்துள்ளார். லாரன்ஸ் கூறியிருக்கும் அப்டேட்டை பார்க்கையில் படம் முதல் 3 பாகங்களைன் காட்டிலும் மிரட்டலாக இருக்கும் எந்த் தெரிகிறது.
