
Cinema News
ராகவா லாரன்ஸின் தம்பிக்கும் அதே ஃபார்முலா தான் போல.. வெளியானது புல்லட் படத்தின் டீசர்..
தமிழ் சினிமாவில் நடிகர் அருள்நிதி வைத்து டைரி படத்தை இயக்கிய இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் டான்ஸ், நடிப்பு, இயக்கம், என அனைத்திலும் கலக்கும் ராகவா லாரன்ஸ் அவரின் தம்பி எல்வினை தமிழ் சினிமாவிற்கு புல்லட் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக்குகிறார். மேலும் இதில் ராகவா லாரன்ஸ் போலீஸ் கதாபாத்திரத்தில் தம்பிக்காக இந்த படத்தில் நடித்துள்ளார்.
முன்னதாக இதன் அறிவிப்பு வீடியோ கடந்த ஆண்டு ராகவா லாரன்ஸ் இன் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி இருந்தது. அப்பொழுது இந்த படம் ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. டீசரைப் பார்த்தால் தம்பிக்கு முதல் படமே அண்ணனின் ட்ரேட் மார்க் ஆன ஹாரர் ஸ்டைலில் இருக்கிறது.
நடன இயக்குனரான ராகவா லாரன்ஸ் இயக்குனராக காஞ்சனா சீரியஸ் படங்களின் மூலம் மாஸ் காட்டினார். அந்த திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை ரசிக்கும்படியாகவும் இருந்தது. அதுமட்டுமல்லாமல் பேய் கதையில் காமெடி கலந்து திகில் திரைப்படமாக மாற்றி, ட்ரெண்டை உருவாக்கியது லாரன்ஸ் மாஸ்டர் தான். அதில் மிகப்பெரிய வெற்றியும் கண்டார். அதேபோல தன் தம்பிக்கு முதல் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆக வேண்டும் என்று புல்லட் திரைப்படத்தையும் ஹாரர் ஸ்டைலில் உருவாக்கியிருக்கிறார்.
டைரி படத்தை இயக்கிய இன்னாசி பாண்டியன் இந்த படத்தையும் ஆக்ஷன் திரில்லர் என ஒரு பக்கா கமர்சியல் படமாக புல்லட் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் என டீசரை பார்க்கும்போது தெரிகிறது. மேலும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார்.
பின்னணி இசைக்கு மிகவும் பிரபலமான இவர் டீசரில், தனது இசையால் பயம் காட்டி தனது கைவண்ணத்தை காட்டியுள்ளார். கண்டிப்பாக படத்திலும் இவரின் மிரட்டல் இசை விருந்து காத்திருக்கும். மேலும் இதில் ராகவா லாரன்ஸ் உடன் எல்வின், வைஷாலி, சிங்கம் புலி மற்றும் ரங்கராஜ் தேஷ் பாண்டே போன்ற பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர். டீசரை பார்க்கும்போது புல்லட் ஜெட் வேகத்தில் பறப்பது போல் இருக்கிறது.