Categories: Cinema News latest news

ரஜினி நடிக்க மறுத்த படம்! – ரகுவரனை வைத்து ஹிட் கொடுத்த இயக்குனர்

தமிழ் சினிமாவில் 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் ரகுவரன்.  பெரும்பாலும் வில்லனாக மிரட்டிய ரகுவரன் ஹீரோவாக கை நாட்டு, மைக்கேல் ராஜ், கூட்டுப் புழுக்கள் என்ற படத்தில் தான் நடித்தார். ஹீரோவாக மூன்று படங்களில் மட்டுமே நடித்த ரகுவரனை மக்கள் வில்லனாக மட்டுமே பார்க்க ஆசைப்பட்டார்கள்.

வில்லன் கதாபாத்திரம் தான் ரகுவரனை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் போதே சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி போன்ற படங்களில் தன்னுடைய சிறந்த குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தினார் ரகுவரன். குணச்சித்திர வேடமும் இவருக்கு கச்சிதமாக பொருந்தியது.

raghu1

ஆரம்பத்தில் வில்லனாக நடித்து ஒரு நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றாலும் முதல்வன் மற்றும் பாட்ஷா போன்ற படங்கள் தான் இவரை ஒரு பக்கா வில்லனாக மிரட்ட வைத்தது. அதிலும் அந்த ஐ நோ ஐ நோ வசனம் இன்றளவும் பல பேர் மிமிக்ரி செய்து ரகுவரனை நியாபகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் ரஜினியே தனக்கு வில்லனாக நடிக்க கச்சிதமாக பொருந்திய நடிகர் ரகுவரன் என கூறியிருந்தார். இந்த நிலையில் ரஜினி நடிக்க வேண்டிய படத்தில் ரகுவரன் நடித்து அந்த படத்தை 100 நாள்கள் வெற்றிப் படமாக ஆக்கியிருக்கிறார் ரகுவரன். ரகுவரன் மைக்கேல் ராஜ் என்ற படத்தில் நடித்தார். அது முதலில் ரஜினி நடிக்க வேண்டிய படமாம்.

raghu2

ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் நடிக்க முடியவில்லையாம். அதன் பின்னர் அந்தப் படத்தின் இயக்குனர் விசி.குகநாதன் ரகுவரனை நடிக்க வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : இப்பதான் பாஷா..கபாலி!. ரஜினி டானாக நடித்த முதல் திரைப்படம் எது தெரியுமா?..

 

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini