
Cinema News
கமலின் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த ரகுவரன்!.. அட இந்த சின்ன காரணத்துக்கா?!…
Published on
By
தமிழ் சினிமாவில் சில சமயங்களில் இரண்டு சிறந்த நடிகர்கள் இணைந்து நடிக்கமாலேயே போய் விடுவார்கள். அப்படித்தான் கலைஞானி கமல்ஹாசனும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் பல படங்களில் கலக்கிய ரகுவரனும் ஒரு படத்திலும் நடிக்கவில்லை.
கமல்ஹாசன் 5 வயது முதல் சினிமாவில் நடித்து வருகிறார். 68 வயதிலும் விக்ரம் படம் மூலம் தன்னால் இப்போதும் மெகா ஹிட் படங்களை கொடுக்க முடியும் என நிரூபித்துள்ளார். இவர் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால், அது என்ன காரணமோ அவர் ரகுவரனுடன் கடைசி வர நடிக்கவே இல்லை. அதேபோல், ரகுவரனும் சினிமாவில் 30 வருடங்களுக்கு மேல் பல திரைப்படங்களில், பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் அசத்தலான நடிப்பை கொடுத்துள்ளார். ஆனால், அவரும் கடைசி வரை கமலுடன் நடிக்கவே இல்லை.
kamal
தன்னைவிட நன்றாக நடிக்கும் நடிகர்களை கமல் தன்னுடன் நடிக்க வைக்க மாட்டார் எனவும், தன்னை விடவும் சிறப்பாக நடித்துவிட்டார் அவர்கள் தொடர்பான காட்சிகளை எடிட்டிங் அறையில் வெட்டி விடுவார். இதனால்தான் கமல் படங்களில் நடிப்பதை ரகுவரன் தவிர்த்தார் என்றும் பயில்வான் ரங்கநாதன் ஒரு யுடியூப் வீடியோவில் கூறியிருந்தார். இந்த கருத்தை பலரும் நம்புகின்றனர். ஆனால், அதில் உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து இப்போது வரை பேசப்படும் ‘நாயகன்’ படத்தில் நாசர் வேடத்தில் முதலில் நடிக்கவிருந்தது ரகுவரன்தானாம். ஆனால், அந்த வேடத்திற்காக தன்னால் முடியை வெட்டமுடியாது என ரகுவரன் மறுத்துவிட்டதால் அவருக்கு பதில் நாசர் நடித்துள்ளார்.
nazar
இந்த தகவலை ரகுவரனின் மனைவியும், நடிகையுமான ரோகிணியே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மேலும் ‘கமல் சார் எவ்வளவோ திறமையான நடிகர்களுடன் நடித்துள்ளார். அவரும் ஒரு சிறந்த நடிகர். ரகுவரனை பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் கமல் சாருக்கு இல்லை. இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை என்பதுதான் நிஜம்’ எனவும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: உடம்போடு ஒட்டிய துணி செம ஹாட்டு!.. இன்ச் இன்ச்சா காட்டும் மாளவிகா…
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் ஒரு தீவிரமான அஜித் ரசிகர். திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக...
Karuppu Movie: சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக...
Bison: சியான் விக்ரமின் மகன் துருவ். தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மா படம் மூலம்...
Bison: மாரிசெல்வராஜ் இயக்கத்தில் அடுத்து வரப் போகும் திரைப்படம் பைசன். துருவ் விக்ரம் நடிப்பில் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றன....
Bison: நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பைசன். இந்த படம் அக்டோபர்...