×

விசாரணைக்கு ஒத்துழைக்காத ராகிணி.. மேலும் 5 நாட்கள் காவல்.. சிக்கும் திரை பிரபலங்கள்...

 

பாலிவுட்டுக்கு அடுத்து கன்னட திரையுலகில் போதை பொருள் புலங்குவதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் திரைப்படத்தில் நடித்தவர் ராகினி திவேதி. கன்னடம், தெலுங்கு, மலையாள திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு அவரின் நண்பரும், அரசு ஊழியருமான ரவி என்பவர் போதை மருந்து பயன்படுத்தியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன்பின், ராகினியை விசாரனைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் ஆஜராகவில்லை.

இதைத்தொடர்ந்து, 2 நாட்களுக்கு முன்பு அவரின் வீட்டில் போலீசார் சோதனையிட்டனர். அதன்பின் அவரை போலீசர் கைது செய்து அழைத்து சென்றனர். கன்னட திரையுலகில் 15க்கும் மேற்பட்ட திரைப்பிரபலங்கள் போதை மருந்தை பயன்படுத்திருக்கலாம் எனவும், அவர்கள் விரைவில் சிக்குவார்கள் என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், விசாரணையில் ராகிணி சரியான ஒத்துழைப்பை அளிக்கவில்லை. முதலில் உடல்நிலை சரியில்லை எனக்கூறி ஒத்துழைக்க மறுத்துள்ளார். அதன்பின் தான் கலந்து கொண்ட பார்ட்டிகள் பற்றி தனக்கு தெரியாது அதுபற்றி தனக்கு நினைவில்லை என்றும் கூறியுள்ளார். எனவே, மேலும் 5 நாட்கள் போலீசார் காவலில் எடுத்துள்ளனர். அவரை சென்னை அழைத்து வந்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். எனவே, தமிழ் நடிகர்கள், நடிகைகள் சிக்குவார்களா என்கிற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News