Categories: latest news

ரஹ்மான் திருமணம் காதல் திருமணமா? இந்த ஈகோ வேற இருந்துச்சா? பிரபலம் சொல்றத கேளுங்க

சமீபகாலமாக திரைத்துறையில் விவாகரத்து பிரச்சினைதான் தொடர்ந்து நடந்துவருகின்றது . நேற்று ரஹ்மான் – சாயிரா இவர்கள் விவாகரத்து செய்ய போவதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எந்தவொரு கெட்டப்பழக்கமும் இல்லாதவர் ஏஆர் ரஹ்மான். எந்தப் பெண்ணையும் நிமிர்ந்து கூட பார்க்கமாட்டார். தன் மனைவியின் மீது அலாதி அன்பு கொண்டவர்.

இப்படிப்பட்டவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என அவரது மனைவி சாயிரா அறிவித்திருந்தார். இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளரான ஆஸ்கர் பிலிம்ஸ் பாஸ்கரனின் மகன் பாலாஜி ரஹ்மானுக்கும் அவரது மனைவிக்கும் இடையே என்ன மாதிரியான பிரச்சினைகள் இருக்கும் என ஒரு யூகத்தின் அடிப்படையில் கூறியிருந்தார். அதாவது ரஹ்மான் ஒரு தர்காவில்தான் சாயிராவை சந்தித்தாராம்.

இதையும் படிங்க: எஸ்கே படத்தில் ஜெயம்ரவி வில்லனா? சுதா கொங்கரா வைத்த ட்விஸ்ட்டு!..

பார்த்த முதல் நாளிலேயே சாயிராவை ரஹ்மானுக்கு பிடித்துப் போக சாயிராவிடம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டிருக்கிறார். அவர் தன் வீட்டில் வந்து பேசுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதன் பிறகு ரஹ்மான் தன் அம்மாவிடம் வந்து சொல்ல அப்படித்தான் இவர்களது திருமணம் நடந்ததாம். மேலும் சுஹாசினி தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் சாயிரா கலந்து கொண்டு பேசிய போது அவர் ஆசையை கூறினார்.

rahman

அதாவது இவருடன் இரவு நேரத்தில் ஹெல்மெட் போடாமல் பைக்கில் போகவேண்டும் என்று கூறினாராம். இதிலிருந்தே ரஹ்மான் விஷயத்தில் சாயிரா மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்திருக்கிறார். ஆனால் ரஹ்மானை பொறுத்தவரைக்கும் அவ்வளவு எளிதாக அவரால் வெளியே வரமுடியாது. உலகளவில் பிரபலமாக இருக்கும் போது சாதாரண மனிதராக அவரால் வெளியில் சுற்ற முடியாது.

இதையும் படிங்க: நன்றி கெட்டதனமா நடந்துகிட்ட நயன்!.. பொதுநிகழ்ச்சியில் சிம்புவுக்கு நேர்ந்த அவமானம்!.. இதெல்லாம் ஓவரு!…

இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களில் சாயிரா ஆசைப்பட்டிருக்கிறார். மேலும் சிறந்த கணவர் என்பதை விட சிறந்த மகனாக இருந்திருக்கிறார் என்று ஒரு சமயம் சுஹாசினி நிகழ்ச்சியில் கூறினாராம் .இதிலிருந்தே அம்மா விஷயத்தில்தான் அதிக கவனம் செலுத்தியிருப்பார் போல் ரஹ்மான். இது கூட அவர் மனைவிக்கு ஒரு வித பொறாமையாக கூட இருக்கலாம் என்று பாலாஜி கூறினார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini