×

உ.பி.யில் ராகுல்காந்தி அதிரடி கைது!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்றபோது ராகுல்காந்தி கைது.

 

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் அடுத்த ஹத்ராஸ் நோக்கி நடைபயணம் சென்ற ராகுல்காந்தி அங்கு  பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க பிரியங்கா காந்தியுடன் காரில் சென்றார். அப்போது தடையை மீறி கிராமத்திற்கு சென்றதாக ராகுல்காந்தி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து ராகுல் காந்தி கொடுத்துள்ள புகாரில், தாங்கள் சென்ற காரை வழிமறித்து தடுத்து நிறுத்திய போலீசார் தன்னை கீழே தள்ளிவிட்டு லத்தியால் அடிக்க வந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கொரோனா தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தை மீறிச் ராகுல்காந்தி சென்றதால் அவரை கைது செய்ததாக போலீஸ் தரப்பில் கூறியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News