×

மாணிக்கம் போல சொதப்பி பாட்ஷாவாக கலக்கிய ராகுல் திவேட்டியா! புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!

ஒரே நாளில் ஐபிஎல் ஸ்டாராக மாறியுள்ளார் ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் திவேட்டியா.

 

ஒரே நாளில் ஐபிஎல் ஸ்டாராக மாறியுள்ளார் ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் திவேட்டியா.

நேற்றைய ஐபிஎல் போட்டியைப் பார்த்தவர்கள் 17 ஆவது ஓவருக்கு முன்புவரை ராகுல் திவேட்டியாவை திட்டாமல் இருந்திருக்க முடியாது. டி 20 போட்டி என்பதையே மறந்து 23 பந்துகளுக்கு 17 ரன்களை சேர்த்திருந்தார் அவர். அதுவும் 224 ரன்களை சேஸ் செய்யும் ஒரு போட்டியில்.இவரின் மந்தமான ஆட்டத்தால் ஒரு கட்டத்தில் போட்டி பஞ்சாப் பக்கம் சென்றது.

ஆனால் அப்போதுதான் மாணிக்கமாக இருந்து பாட்ஷாவாக ரஜினி மாறுவது தன் விஸ்வரூபத்தை எடுத்தார் திவேட்டியா. காட்ரெல் வீசிய ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தை ராஜஸ்தான் பக்கம் கொண்டு வந்தார்.  ஒட்டுமொத்தமாக 8 சிக்ஸர்களை விளாசி அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இந்நிலையில் அவருக்கு சமூகவலைதளங்கள் எங்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

From around the web

Trending Videos

Tamilnadu News