×

சமூகவலைதளங்களுக்கு முழுக்கு போடும் மோடி – ராகுல்காந்தி கேலி !

பிரதமர் மோடி சமூகவலைதளங்களில் இருந்து விலகப் போவதாக தெரிவித்துள்ளதை அடுத்து அதை ராகுல்காந்தி கேலி செய்துள்ளார்.

 

பிரதமர் மோடி சமூகவலைதளங்களில் இருந்து விலகப் போவதாக தெரிவித்துள்ளதை அடுத்து அதை ராகுல்காந்தி கேலி செய்துள்ளார்.

பிரதமர் மோடி பதவியேற்றதில் இருந்து பத்திரிக்கையாளர்களோடு சந்திப்பே நடத்திடாத நிலையில் தனது சமூகவலைதளப் பக்கங்களின் மூலம் மக்களோடு உரையாடி வந்தார். இந்தியாவிலேயே அதிகமாக பின்பற்றுபவர்கள் இருக்கும் சமூகவலைதளப் பக்கங்களில் அவருடையதும் ஒன்று.

இந்நிலையில் நேற்றிரவு ‘பேஸ்புக்,  டிவிட்டர், யுட்யூப் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறலாம் என முடிவு செய்துள்ளேன். உங்கள் அனைவருடனும் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன்’ எனக் கூறியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ‘வெறுப்பில் இருந்து வெளியேறுங்கள்…. சமூகவலைதளத்தில் இருந்து அல்ல’ எனத் தெரிவித்துள்ளார்.

மோடியின் இந்த முடிவுக்கான காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை.

From around the web

Trending Videos

Tamilnadu News