×

தமிழ் நாட்டில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், 

 

ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேனி மாவட்டம் மஞ்சளாறு பகுதியில் ஏழு செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் பெரியகுளம் பகுதியில் 4 சென்டி மீட்டர் மழையும், குன்னூர், உதக மண்டலம், விருதுநகரின் சில இடங்களில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 

நீலகிரி மலைப்பகுதிகளில் 2 சென்டி மீட்டர் மழையும், அரண்மனை புதூர், ஆண்டிபட்டி, ஒகேனக்கல், கோத்தகிரி, ஓசூர், அவலாஞ்சி, மேல் பவானி, சோத்துப்பாறை ஆகிய இடங்களில் ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News