×

மூஞ்சி வீங்கி கண்ணு கண்டம் ஆகிடுச்சு... ரைசா முகத்தை சிதைத்த பியூட்டீஷியன்!
 

பேஷியல் செய்து முகத்தை சிதைத்துக்கொண்ட ரைசா!
 
 
மூஞ்சி வீங்கி கண்ணு கண்டம் ஆகிடுச்சு... ரைசா முகத்தை சிதைத்த பியூட்டீஷியன்!

பெங்களூர் மாடல் அழகியான ரைசா வில்சன் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன்பின், பியார் பிரேமா காதல் படத்தில் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார். 

அப்படம் வெற்றி பெற்றது.அதன்பின், காதலிக்க நேரமில்லை, தனுஷ் ராசி நேயர்களே ஆகிய படங்களில் நடித்தார். தற்போது கார்த்திக் ராஜூ இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது ரைசா தனது இன்ஸ்டாவில் ஷாக்கிங் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், ''நான் முகத்துக்கு எளிமையான முறையில் 'பேசியல்' செய்ய பெண் அழகுகலை நிபுணரிடம் சென்றேன். அந்த பெண் எனக்கு விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி எனக்கு தேவையற்ற சில அழகு செயல் முறைகளை செய்தார். 

அதன் விளைவாக எனது முகம் மற்றும் கண் வீங்கி விட்டது. நான் அந்த பெண்ணை தொடர்பு கொண்டபோது என்னை சந்திக்கவோ என்னுடன் பேசவோ மறுத்து விட்டார்.

 ஊழியர்களிடம் கேட்டபோது அவர் வெளியூர் சென்று விட்டதாக தெரிவித்தனர்’’ என்று கூறி முகம் வீங்கி போய் அடையாளமின்றி போன புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

ஒரு வேலை ரைசா மாடல் அழகி என்பதால் திட்டமிட்டு செய்த சதியாக இருக்குமோ? என ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News