Categories: Cinema News latest news

எல்லாரையும் உன் பக்கம் திரும்ப வச்சுட்டியே..! சேலையில் தக தகனு மின்னும் ரைசா…

விஜய்டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் நடிகை ரைசா. வேலையில்லா பட்டதாரி படத்தில் சின்ன ரோலில் நடிகையாக அறிமுகமானார்.

பெங்களூர் மாடல் அழகியாக கலம் கண்டவர். தொடர்ந்து பியார் பிரேமா காதல், தனுஷ் ராஷி நேயர்களே, வர்மா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சியான நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் ரைசா அண்மையில் விஷ்ணுவிசால் நடிப்பில் உருவான எஃப்.ஐ.ஆர் படத்திலும் நடித்திருப்பார்.

 

தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகியுள்ள நடிகை ரைசா தனது கவர்ச்சி கரமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் மஞ்ச காட்டு மைனாவைப் போல மஞ்சள் கலர் பட்டு சேலையில் சும்மா ஜொலிக்கிறார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸேர் செய்துள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் கொள்ளை கொள்ளும் அழகு என வர்ணித்து வருகின்றனர்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini