அஸ்வத்துக்கு பிறந்த நாள் வீடியோ வெளியிட்ட ராஜ் கமல்.. அப்போ அது கன்ஃபார்ம்தான்
கடந்த 2020ம் ஆண்டு விஜய் சேதுபதி, அசோகுமார் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படத்தின் வெற்றிக்கு பின் அடுத்து பிரதீப் ரங்க நாதன் நடிப்பில் டிராகன் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் சூபப்ர் ஹிட்டாகி ரூ 100 கொடிக்கும் மேல் வசூல் ஆனது. இதையத்து சிம்பு , கயாடு லோஹர் நடிக்கும் படத்தை இயக்குவதாக கூறப்பட்டது.
இதற்கிடையே ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி ஒரு படம் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. முதலில் சுந்தர்.சி இயக்குவதாக இருந்தது. ஆனால் திடீரென அவர் விலகிவிட அடுத்து சிபி சக்ரவர்த்தி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் என்ன நடந்ததோ அவரும் இதிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. தற்போது ரஜினியின் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரபூர்வமாக எந்த தகவலும் இல்லை.
இந்த நிலையில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து பிறந்த நாளை யொட்டி ராஜ்கமல் நிறுவனம் வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதை பார்க்கையில் ரஜினியின் படத்தை அவர் இயககுவது உறுதியானது என ரசிகர்கள் பல்ரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
From Imagination to Inspiration
— Raaj Kamal Films International (@RKFI) June 2, 2026
Birthday wishes to Director @Dir_Ashwath#HBDAshwathMarimuthu #AshwathMarimuthu pic.twitter.com/3qoU2gV6EV
