ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் மொத ராத்திரி பட இயக்குனர்!.. வேறலெவல் அப்டேட்...
தமிழ் சினிமாவில் பல வருடங்கள் போராடி குறும்படங்களை இயக்கி வந்த ராஜா கருப்பசாமி இயக்கி வெளியான திரைப்படம் மொத ராத்திரி. இந்தப் படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
குறைவான பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் ராஜா கருப்பசாமி ஒரு முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார். அவரின் நடிப்பு ரசிகர்களை சிரிக்க வைத்தது. இந்த படத்தை பார்த்த கமல்ஹாசன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார்.
இந்நிலையில்தான் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தை ராஜா கருப்புசாமி இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. அநேகமாக அவரை அந்த திரைப்படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். தாய்க்கிழவி திரைப்படத்தை பார்த்துவிட்டு அப்படத்தின் இயக்குனர் சிவக்குமார் முருகேசனை வைத்து சேயோன் என்கிற திரைப்படத்தை கமல் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். எனவே, மொத ராத்திரி பட இயக்குனர் ராஜா கருப்பசாமிக்கும் கமல் வாய்ப்பு கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
