×

ஆவலுடன் எதிர்பார்த்த ராஜா ராணி 2 Promo - ஆல்யாவுக்கு ஜோடி சஞ்சீவ் இல்ல!

ராஜா ராணி 2 சீரியலின் புரோமோ வீடியோ இதோ

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் சஞ்சீவ் மட்டும் ஆலியா மானசா. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை ரசிகர்கள் மிகவும் கொண்டாடினர். பொதுவாகவே இந்த Couple-க்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர்.

கொரோனா ஊரடங்கில் ஆல்யா அவ்வப்போது மகள் ஐலாவின் கியூட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அத்துடன் வீட்டில் இருந்தபடியே விளம்பரங்களில் நடித்து பணம் சம்பாதித்து வருகிறார். கர்ப்பமாக இருந்ததால் சீரியலில் இருந்து சற்று ஓய்வெடுத்த ஆல்யா தற்ப்போது மீண்டும் புதிய சீரியல் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் தற்ப்போது மீண்டும் ராஜா ராணி 2 சீரியலில் ஆல்யா நடித்துள்ளார். ஆனால், இதில் அவருக்கு ஜோடியாக கணவர் சஞ்சீவ் இல்லை. அவருக்கு பதிலாக கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் திருமணம் சீரியலில் நடித்து வரும் நடிகர் சித்து ஹீரோவாக நடித்து உள்ளார். இதன் ப்ரொமோ வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி சூப்பர் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஆல்யா மனசா - சஞ்சீவ் ஜோடியை விட இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி பக்காவாக இருக்கும் என பேசப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News