அவரு லிங்குசாமி இல்ல!.. லின்க் சாமி!.. தேவயானிக்கு காதல் வர காரணமே இவர்தான்!..

 
அவரு லிங்குசாமி இல்ல!.. லின்க் சாமி!.. தேவயானிக்கு காதல் வர காரணமே இவர்தான்!..

90களில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தவர் தேவயானி. இவர் மும்பையை சேர்ந்தவர்.. தாய்மொழி ஹிந்தி.. ஆனாலும் தொடர்ந்து நிறைய தமிழ் படங்களில் நடித்து முக்கிய நடிகையாக மாறினார். 90களில் விஜய், அஜித், சரத்குமார், முரளி, கார்த்திக், பிரபு உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தார். அதேபோல் மார்க்கெட்டில் பீக்கில் இருக்கும் போதே இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்..

ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டதில் தேவயானி குடும்பத்தில் யாருக்கும் விருப்பமில்லை என்று அப்போதே செய்திகள் வெளியானது. அதன்பின் மார்க்கெட் இழாந்த தேவயானி சில சீரியல்களில் நடித்தார். ஒருபக்கம் அவரின் கணவர் ராஜகுமாரன் ஊடகங்களில் பேட்டி கொடுக்கும்போது சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்..

சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய ராஜகுமாரன் ‘லிங்குசாமி தேவயானியை வைத்து ஆனந்தம் படம் எடுப்பதற்கு முன்பே நாங்கள் நல்ல நண்பர்கள்.. ஆனந்தம் சூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது அங்கே என்னை தேவையானி வர சொல்லியிருந்தார் அங்கே நான் போனதும் லிங்குசாமி தேவயானிகிட்ட ‘என்ன மேடம் அவர் உங்களை எவ்வளவு லவ் பண்றாரு.. நீங்க கண்டுக்கவே மாட்றீங்க.. அவர் உங்களுக்காகத்தான் வந்திருக்காரு’ என சொல்லிவிட்டார்..

எனக்கு பயங்கர அதிர்ச்சி.. ஏன்னா எங்க ரெண்டு பேருக்கும் அப்ப எந்த லவ்வும் இல்லை.. அவர் லிங்குசாமி இல்ல லிங்க் சாமி.. அவர் பண்ண வேலைதான் இது.. அதுக்கு அப்புறம்தான் எங்களுக்கு இடையே காதல் வந்தது’ என சொல்லியிருக்கிறார்..

From Around the web