×

மிட்நைட்டில் மதுபாட்டில்களுடன் போலீசிடம் சிக்கிய ராஜமாதா..!

கொரோனா ஊரடங்கு மது  விற்பனை  முற்றிலுமாக நிறுத்தப்பட்டு மதுக்கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த மே  7 ஆம் தேதி திறக்கப்பட்டு ஓஹோன்னு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து இரண்டே நாளில் மீண்டும் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.

 

தற்போது சென்னை மாநகரத்தை தவிர மற்ற இடங்ககளில் மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை வாசிகள் பெங்களூர் போன்ற பிற மாநிலங்களுக்கு சென்று மது வாங்கி வருகின்றனர். அந்தவகையில் பிரபல நடிகை  ரம்யா கிருஷ்ணன் மது பாட்டில்களுடன் போலீசிடம் சிக்கியுள்ளார்.

அதாவது, நேற்றிரவு இரவு கிழக்குக் கடற்கரைச் சாலை முடுக்காட்டில் உள்ள சோதனைச்சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த கானத்தூர் போலீஸார், அவ்வழியே வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தபோது அந்த காரினுள் நடிகை ரம்யாகிருஷ்ணன், அவரது சகோதரி வினயா கிருஷ்ணன் இருவரும் இருந்துள்ளனர்.

அந்த காரில்  96 பீர்பாட்டில்கள்,8 மதுபாட்டில்கள் இருந்துள்ளன. இதையடுத்து  வாகன ஒட்டி  செல்வகுமார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பின்னர், சிலமணி நேரங்களில் நடிகை ரம்யா கிருஷ்ணன் கார் ஓட்டுனர் செல்வக்குமாரை பிணையில் அழைத்துச் சென்றதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News