×

என்னங்க இப்படி பண்ணிட்டீங்க...ஜீத்து ஜோசப்பிற்கு மெசேஜ் செய்த ராஜமௌலி... 

மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்பிற்கு பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி அனுப்பிய மெசேஜ் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
என்னங்க இப்படி பண்ணிட்டீங்க...ஜீத்து ஜோசப்பிற்கு மெசேஜ் செய்த ராஜமௌலி...

மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த படம் திரிஷ்யம். மோகன்லால் - மீனா ஜோடி தங்கள் மகளிடம் அத்துமீற முயன்ற இளைஞரைக் கொன்றுவிடவே, அதிலிருந்து மீள அந்தக் குடும்பம் படும் பாடே திரிஷ்யம் படம். படத்தின் கதைப்படி ஹீரோ மோகன்லாலுக்கு இரண்டு பெண் குழந்தைகள். இதே ஃபிளாட்டுடன் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான இரண்டாவது பாகமும் ஹிட்டடித்திருக்கிறது. 

படத்திற்கு செம வரவேற்பு உருவாகி இருக்கிறது. பலரும் இந்த படத்தினை உடனே எல்லா மொழிகளிலும் ரீமேக் செய்ய வலியுறுத்தி வருகின்றனர். பலரும் ஜீத்து ஜோசப்பின் கதை வேற லெவல் என பாராட்டி வருகிறார்கள். இந்த பட்டியலில் தற்போது இணைந்து இருப்பவர் இயக்குனர் ராஜமௌலி. தனது பாராட்டை மெசேஜாக அனுப்பி இருக்கிறார். இந்த மெசேஜ் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதில், ஹாய் ஜீத்து. நான் இயக்குனர் ராஜமௌலி. திருஷ்யம்2 படத்தை சில நாட்கள் முன்னர் பார்த்தேன். படம் என் எண்ணங்களில் ஓடிக்கொண்டே இருந்ததால், நான் த்ரிஷ்யத்தின் முதல் பகுதியைப் பார்க்க திரும்பிச் சென்றேன். (திரிஷ்யத்தை தெலுங்கில் வெளியிட்டபோது மட்டுமே பார்த்தேன்) இயக்கம், திரைக்கதை, எடிட்டிங், நடிப்பை பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும்... ஒவ்வொன்றும் உண்மையிலேயே சிறப்பாக அமைந்து இருக்கிறது. ஆனால் எழுத்து உண்மையில் வேறு விஷயம். இது உலகத் தரமாகும், முதல் பகுதி ஒரு தலைசிறந்த படைப்பாகும். உங்களிடம் இருந்து மேலும் பல தலைசிறந்த படைப்புகளை எதிர்பார்க்கிறேன் எனக் குறிப்பிட்டு இருந்தார். இதை தனது பேஸ்புக்கில் வெளியிட்ட ஜீத்து நன்றி ராஜமௌலி சார். நீங்கள் எனது நாளை சிறப்பானதாக்கி விட்டீர்கள் என பதிவிட்டு இருக்கிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News