10 வருடங்கள்!.. 3 படங்கள்!.. இந்தியாவிலேயே அதிக வசூலை கொடுத்த ராஜமௌலி!..
சொந்த மாநிலம் ஆந்திரா என்றாலும் சென்னையில் சத்யம் தியேட்டரில் தமிழ் படங்களை பார்த்து வளர்ந்தவர்தான் ராஜமௌலி. இதை அவரே பல பேட்டிகளிலும் சொல்லியிருக்கிறார். அதிலும் மணிரத்னம், ஷங்கர் ஆகிய இயக்குனர்களின் படங்களுக்கு இவர் ரசிகர். ஷங்கரின் படங்களை பார்த்த பின்னர்தான் அதிக பட்ஜெட்டுகளில் பிரம்மாண்டமாக படமெடுக்கலாம் என்கிற எண்ணமும் இவருக்கு வந்திருக்கிறது. 2001ம் வருடம் இவரின் சினிமா பயணம் தொடங்கியது. கடந்த 25 வருடங்களில் 12 படங்களை மட்டுமே ராஜமௌலி இயக்கியிருக்கிறார். ஆனால் தற்போது இந்தியாவின் முக்கிய இயக்குனராக மாறியிருக்கிறார்.
இவர் முதலில் இயக்கிய படம் ஸ்டூடன்ட் நம்பர் ஒன். அதில் ஜூனியர் என்டிஆர் நடித்திருந்தார். அதன்பின் தொடர்ந்து குறைவான பட்ஜெட்டில் பல மசாலா படங்களை இயக்கினார் ராஜமௌலி. ராம்சரண் அறிமுகமான மகதீரா படம் இவருக்கு முக்கிய படமாக அமைந்தது. அந்த படத்தின் மேக்கிங்க் தெலுங்கு சினிமா உலகில் பேசப்பட்டது.

அதேபோல் தெலுங்கில் அவர் இயக்கிய ஈகா திரைப்படம் தமிழில் நான் ஈ என்கிற பெயரில் வெளியாகி நல்ல வசூலை பெற்றது. அதன்பின் பாகுபலி, பாகுபலி 2, RRR என்கிற மூன்று படங்களை ராஜமௌலி இயக்கினார். தற்போது மகேஷ்பாபுவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார் ராஜமௌலி. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற 15ம் தேதி வெளியாக உள்ளது.
கடந்த 10 வருடங்களில் ராஜமௌலி பாகுபலி, பாகுபலி 2, RRR ஆகிய 3 படங்களை மட்டுமே இயக்கி இருக்கிறார் ஆனால் ஆச்சரியம் என்னவெனில் இந்த மூன்று படங்கள் மூலமாகவே ராஜமவுலி 4900 கோடி வசூலை தெலுங்கு சினிமாவுக்கு கொடுத்திருக்கிறாராம். இதை இந்தியாவில் எந்த இயக்குனரும் செய்யவில்லை என்கிறார்கள்.
