×

2 கதாநாயகிகளால் இடியாப்ப சிக்கலில் ராஜமவுலி

பாகுபலி திரைப்படத்திற்கு பின் அப்பட இயக்குனர் ராஜமவுலி இயக்கி வரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண்,  நடிகர் அஜய் தேவ்கன்,   நடிகை ஆலியா பட் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகிறது.

 

அண்மையில் வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவை தென்னிந்திய சினிமாவே திரும்பி பார்த்தது. நெருப்பு நீர் என வித்யாசமான கான்செப்டில் வெளியான இப்போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து படத்தை காண உலகம் முழுவதும் உள்ள ராஜமௌலியின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இப்படத்தின் நடிக்கும் லண்டனை சேர்ந்த ஹீரோயின் ஓலிவியா இந்த வருடம் தன்னால் படத்தில் வந்து நடிக்க முடியாது என்று கூறிவிட்டதாக தெரிகிறது. இன்னொரு நடிகையான பாலிவுட் நடிகை ஆலியா பட், படத்தின் வேலைகள் தாமதமாகிறது. அதனால் தான் வேறொரு படத்திற்குக் கொடுத்த ஹால்சீட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று ராஜமௌலியிடம் கூறி அவரை டென்சன் ஏற்றியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ராஜம்மௌலியின் படங்கள் என்றாலே வருட கணக்கில் ஷூட்டிங் நடக்கும் ஆனால், ஒர்த் ஆனதாக சரித்திரம் பேசுபடியாக இருக்கும் இதற்க்கெல்லாம் பொறுமை காப்பவர்களே வெற்றியடைவர். நடிகர் பிரபாஸ் பாகுபலிக்காக 5 வருடம் ஒதுக்கி வேறு எந்த ஒரு படத்திலும் கம்மிட்டாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News