Varanasi: படத்த எடுத்துட்டேன்.. பாத்து பண்ணுங்க!.. ராஜமௌலி நிலமை இப்படி ஆகிப்போச்சே!..
பாகுபலி, பாகுபலி 2, RRR போன்ற திரைப்படங்களை இயக்கி இந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் ராஜமௌலி. இவர் இயக்கிய பாகுபலி 2 திரைப்படம் 1500 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. குறிப்பாக இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய எல்லா மொழிகளிலும் வசூலை அள்ளியது.
இன்னும் சொல்லப்போனால் ஒரு மொழியில் ஒரு படத்தை உருவாக்கி பல மொழிகளும் வெளியிட்டு பல நூறு கோடி வசூலை அள்ளும் பேன் இண்டியா என்கிற கான்செப்ட்டுக்கு விதை போட்டவர் ராஜமௌலிதான். தற்போது அதை பலரும் பின்பற்ற துவங்கி விட்டனர். பாகுபலி 2-விற்கு பின் பிரபாஸ் நடிக்கும் எல்லா படங்களும் பேன் இண்டியா படங்களாகவே வெளியாகி வருகிறது.
தற்போது மகேஷ் பாபுவை வைத்து வாரணாசி என்கிற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் ராஜமௌலி. இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா, பிரித்திவிராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். கடந்த 15ம் தேதி இப்படத்தின் டைட்டில் டீசரையும் படக்குழு வெளியிட்டது. இந்த படத்தில் அதிகமான கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. வாரணாசி 2027 கோடை விடுமுறையில் வெளியாகும் என்கிறார்கள்.

தெலுங்கு சினிமாவில் முதல் முதலாக IMAX ஃபார்மேட்டில் முழு படத்தையும் எடுத்திருப்பதாக அந்த விழாவில் ராஜமௌலி அறிவித்தார். ஆனால் உண்மையில் தற்போது தயாராகி வரும் ராமாயணா படம்தான் IMAX ஃபார்மேட்டில் எடுக்கப்படும் முதல் படம் என ஒரு பக்கம் பேசப்படுகிறது.
முழு IMAX ஃபார்மேட் என்றால் அது 1.43:1 என்பதுதான். இந்த தொழில்நுட்பத்தில்தான் வாரணாசி படத்தை எடுத்திருப்பதாக ராஜமௌலி செல்கிறார். ஆனால் உலகத்தில் இந்த தொழில்நுட்பம் உள்ள தியேட்டர்கள் 42 மட்டும்தான். இந்தியாவில் கோவையில் உள்ள பிராட்வே தியேட்டரில் மட்டும்தான் இந்த தொழில்நுட்பம் இருக்கிறது.
ஹைதராபாத்தில் கூட இந்த தொழில்நுட்ப அம்சத்தை கொண்ட தியேட்டர்கள் இல்லை. எனவேதான் வாரணாசி விழாவில் பேசிய ராஜமௌலி ‘படம் வெளியாவதற்குள் ஐமேக்ஸ் 1.43:1 வசதியை தியேட்டர்களில் கொண்டு வாருங்கள்’ என தியேட்டர் அதிபர்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.
