Varanasi: ஓரு பிளானோடுதான் பிரியங்கா சோப்ராவை இறக்கியிருக்காரு! ராஜமௌலியின் ராஜதந்திரம்
சமீபத்தில் வாரணாசி படத்தின் டிரெய்லர் வெளியானது. இந்தப் படத்தில் மகேஷ்பாபு ருத்ரா என்ற கேரக்டரில் நடிக்கிறார். மந்தாகினி கேரக்டரில் பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். மெயின் வில்லனாக மலையாள நடிகர் ப்ரித்விராஜ் நடிக்கிறார். ராஜமௌலியின் இயக்கத்தில் படம் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. அடுத்தவருடம் படம் ரிலீஸாக இருக்கிறது. பேன் இந்தியா படமாக எல்லா மொழிகளிலும் படம் ரிலீஸாக இருக்கிறது.
ஏற்கனவே ராஜமௌலி 1000 கோடியை பார்த்தவர். ஆர்.ஆர்.ஆர் , பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் என தான் யார் என்பதை நிருபித்தவர். ஆனால் அப்படி எந்தவொரு பந்தாவும் இல்லாமல் வாரணாசி டிரெய்லர் விழாவில் மிகவும் சாதாரணமாக, படத்தை பாருங்க, கொண்டாடுங்க என்பதை போல் மட்டும் பேசியிருந்தார். மகேஷ் பாபுவும் ஓவர் பில்டப் எல்லாம் கொடுக்கவில்லை. இத்தனைக்கும் ஒரு பெரிய நடிகரின் மகன் மகேஷ்பாபு.
ஏற்கனவே தெலுங்கு உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். ஆனால் அவரை போய் காளை மாட்டில் ஏற வைத்து இன்று அவரை ஒரு மீம்ஸ் மெட்டீரியலாக மாற்றிவிட்டார் ராஜமௌலி. அது ஒரு பக்கம் இருந்தாலும், இவ்ளோ பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்தாலும் எதார்த்தமாக மேடையில் பேசிவிட்டு போனார்கள். அதனால்தான் என்னவோ கன்னடம் மற்றும் தெலுங்கில் அசால்ட்டாக 1000 கோடியை எடுத்துவிடுகிறார்கள்.
கேஜிஎஃப் புரோமோஷனிலும் சரி காந்தாரா புரோமோஷனிலும் சரி யஷ், ரிஷப் ஷெட்டி போன்றோர் எந்தவொரு ஹைப்பையும் ஏற்றவில்லை. ஆனால் இங்கு உதாரணமாக கங்குவா படத்தையே எடுத்துக் கொள்வோம். அந்தப் படத்தின் புரோமோஷனை எப்பொழுதும் யாரும் மறக்க முடியாது. பல மொழிகளில் இருந்து பல பிரபலங்கள் பார்க்க போகிறார்கள் என்றும் 1000 கோடி இல்லை. 2000 கோடியை அள்ள போகிறது என்றும் மிகைப்படுத்தி கூறினார்கள். கடைசியில் ரிசல்ட்?
வாரணாசி படத்தின் மொத்த பட்ஜெட் 800 கோடி என்று சொல்லப்படுகிறது. இதில் பிரியங்கா சோப்ராவை பற்றி சொல்ல வேண்டுமென்றால், ராஜமௌலி இயக்கிய ஆர் ஆர் ஆர் படம் ஆஸ்காருக்கு போனது. அந்த சமயத்தில் பிரியங்கா சோப்ரா ஆர் ஆர் ஆர் படத்தை பற்றி பேசியிருந்தார். அதாவது அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. பார்க்கவும் மாட்டேன். அதில் ஒன்றுமே இல்லை என்பது போல் கூறியிருந்தார்.

அந்த நேரத்தில் பிரியங்கா சோப்ராவை ரசிகர்கள் வச்சு செய்தனர். ஆனால் இன்று அதே பிரியங்கா சோப்ராதான் ராஜமௌலியின் அடுத்த ஹீரோயின். இதற்கு பின்னணியில் என்னுடைய படைப்பை கிட்ட இருந்து பார், அப்போதுதான் நான் யார் என தெரியும் என்பதை உணர்த்தவே பிரியங்கா சோப்ராவை ஹீரோயினாக்கியிருக்கிறாரோ ராஜமௌலி என்று நினைக்க தோன்றுகிறது.
