இரண்டு பாகங்களாக உருவாகும் வாரணாசி?!.. ராஜமவுலி எடுத்த முடிவு!..

 
varanasi

ஏற்கனவே சில திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படம் மூலம் பேன் இண்டியா அளவில் பிரபலமானவர் இயக்குனர் ராஜமௌலி. குறிப்பாக இவர் இயக்கிய பாகுபலி 2 திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

அதன்பின் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோரை வைத்து அவர் இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. தற்போது தெலுங்கு சினிமாவின் இளவரசன் என சொல்லப்படும் மகேஷ் பாபுவை வைத்து கடந்த பல மாதங்களாகவே வாரணாசி என்கிற திரைப்படத்தை மிகவும் பிரமாண்டமாக இயக்கி வருகிறார் ராஜமௌலி. இந்த படத்தின் அறிவிப்பு தொடர்பான வீடியோவே ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது..

இந்த படத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் வில்லனாக நடிக்க, பிரியங்கா சோப்ரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில்தான் வாரணாசி திரைப்படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கலாமா என ராஜமௌலி யோசித்து வருகிறாராம். ஏனெனில் வாரணாசி படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமையை எந்த நிறுவனமும் இதுவரை வாங்கவில்லை. தயாரிப்பாளர் ரூ.650 கோடி விலை சொல்ல நிறுவனங்கள் அதிகபட்சம் ரூ.300 கோடி வரை கொடுக்கலாம் என சொல்லிவிட்டார்கள்.

எனவே படத்தை இரண்டு பாகங்களாக எடுத்தால் 300+300 என 600 கோடி கல்லா கட்டிவிடலாம் என தயாரிப்பாளர் நினைக்கிறாராம். எனவே, வாரணாசி திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

Murugan ..
Murugan ..

5178 Articles

Murugan Manickam is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news. Con tact: mugas123@gmail.com

Tags

From Around the web