Varanasi: மகேஷ்பாபு- ராஜமௌலி படத்தின் தலைப்பை அறிவித்த படக்குழுவினர்
ராஜமௌலி இந்தியாவே திரும்பி பார்க்கும் முக்கிய இயக்குனர்களில் ஒருவர். மகதீரா, நான் ஈ, பாகுபலி என அவர் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றியே. குறிப்பாக பாகுபலி அவரை உலகளவில் கொண்டு சென்றது.
ராஜமௌலி அடுத்து மகேஷ் பாபுவுடன் இணைந்து அடுத்த படத்திற்கு தயராகிவிட்டார். இதில் பிரிதிவிராஜ் , பிரியங்க சோப்ரா என முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் இப்படத்தின் பெயர் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரணாசி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் தலைப்பை இன்று ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் அறிவித்தனர்.
