முதல் முறையாக என்னுடன் இணைந்து பணியாற்றிய பாக்கியராஜ்..! கண்கலங்கும் டி.ராஜேந்தர்!

 
t rajendar, bhagyaraj

என்னோடு சமகாலத்தில் பணியாற்றியவர். தமிழ்த்திரை உலகில் தனக்கென்று தனி முத்திரையைப் பதித்து தனிக்கொடி நாட்டியவர். என் இனிய நண்பர் எழுத்தாளர், இயக்குனர் கே.பாக்கியராஜ் மாரடைப்பால் மறைந்து விட்டார் என்ற துக்க செய்தி என் காதுக்கு எட்டியது. கவலை என் மனதைப் போட்டு வாட்டியது. காரணம் சமீபத்தில் தான் அவரது 50 ஆண்டுகாலம் திரையுலகில் பணியாற்றியவர். பொன்விழாவைக் காண்கிறார் என விழா எடுத்தார்கள்.

அந்த விழாவில் அவரைப் பாராட்ட ரஜினி, மோகன்பாபு உள்பட பலர் வந்தனர். அந்த விழாவுக்கு என்னை அழைத்தார். நீங்களும் நானும் சமகாலத்தில் வந்தவர்கள். உங்களுடன் சேர்ந்து எந்தப் படத்திலும் பணியாற்றல. கண்டிப்பா வரணும்னு கூப்பிட்டார். ரொம்ப நா தழுக்க தழுக்க கூப்பிட்டார். அவர் அத்தனை முறை கூப்பிட்டது என் மனதை வாட்டியது. சரின்னு அந்த விழாவுல கலந்து மனதார அவரைப் பாராட்டினேன். என்னன்னா இவ்வளவு சமீபமா அவர் மறைந்து விடுவார்னு கனவுல கூட நினைக்கல.

அவர் மறைந்து விட்டார் என்பது துக்கம் தாங்கல. நெஞ்சை வாட்டுது. ஆனா சின்ன ஆத்ம திருப்தி என்னன்னா ஒரு மனிதன் மறைந்து விட்ட பிறகு நான் இரங்கல் செய்தி போடுறேன். எல்லாருக்கும் ஆறுதல் தெரிவிக்கிறேன். ஆனா அவர் உயிரோடு இருந்தப்பவே அவர் காதுகுளிர, அவர் மனம் மகிழ சமகாலத்தில என்னோட சீனியர். மூத்தவரு. அவரைப் போய் மனதார பாராட்டி விட்டு வந்தேன். அப்படிங்கறதை நினைக்கும்போது எனக்கு ரொம்ப மனசுக்கு நெகிழ்ச்சியா இருக்கு.

அவரு நானும் அவரும் ஒண்ணா சேர்ந்து பணியாற்றலன்னு சொன்னாரு. என் இனிய நண்பர் சாய் ரமணி ஒரு இயக்குனர். அவர் கன்னடத்துப் பைங்கிளின்னு ஒரு படம் எடுத்துக்கிட்டு இருக்காரு. அந்தப் படத்துக்கு நான் பாடல் எழுதி இசை அமைச்சிக்கிட்டு இருக்கேன். அந்தப் படத்துல கதாநாயகனின் தந்தையாக பாக்கியராஜ், தாயாக பூர்ணிமா நடிக்கிறார்.

அந்த வகையில், டி.ராஜேந்தரையும், பாக்கியராஜையும் இந்தப் படத்தில் இணைய வைப்பது எனக்கு பெருமை என சாய் ரமணி சொன்னார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து நிறைவடையக்கூடிய சூழ்நிலையில், இவர் இப்படி ஒரு முடிவுரையை எழுதிவிடுவார் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை என கண்கலங்குகிறார் டி.ராஜேந்தர்.  

Tags

From Around the web