×

ஹிட்டு கொடுத்தவரையே கழட்டிவிட்ட சந்தானம்.. ராஜேஷ் நிலமை இப்படி ஆகிப்போச்சே!....

 

ஏற்கனவே பல படங்களில் நடித்திருந்தாலும் இயக்குனர் ராஜேஷ் இயக்கிய சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய படங்கள் அவ்ரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அதேபோல், ராஜேஷ் இயக்கிய ஆல் இன் ஆல் அழகுராஜா,ஒரு கல் ஒரு கண்ணாடி, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க அப்படங்களில் ஹீரோவோடு வலம் வரும் 2 வது கதாநாயகனாகவே சந்தானத்தை நடிக்க வைத்தார் ராஜேஷ். அதன் காரணமாகவே ஹீரோவாக நடித்தால் என்ன என்கிற ஆசை சந்தானத்திற்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

santhanam

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு சந்தானத்தை ஹீரோவாக வைத்து  ஒரு படத்தை ராஜேஷ் இயக்கும் வேலை துவங்கியது. ஆனால், திரைக்கதை, சம்பளம் என சில சிக்கல்களால் இப்படத்திலிருந்து சந்தானம் விலகி விட்டது தெரியவந்துள்ளது. எனவே, ஜி.வி.பிரகாஷை தொடர்பு கொண்டு நாம் மீண்டும் இணைந்து பணி புரிவோம் எனக்கூறி வருகிறாராம். ஜி.வி.பிரகாஷை வைத்து ‘கடவுள் இருக்கான் குமாரு’படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய ஹிட்லாம் கொடுத்தவரு நிலைமை இப்படி ஆகிப்போச்சே!....

From around the web

Trending Videos

Tamilnadu News