Rajnikanth1
2019ன் இறுதியில் கே.பாலசந்தரின் சிலை திறப்பு விழா, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்னேஷனல் அலுவலகத்தின் திறப்பு விழா, அனந்துவோட பிறந்தநாள் என முப்பெரும் விழா ஒரே நாளில் முத்தாய்ப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலைஞானி கமலைப் பற்றி சொன்ன சில விஷயங்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. ரஜினிகாந்த் கமல்ஹாசன் நட்புக்கு இது மிகச்சிறந்த உதாரணம். அவற்றை நம்ம சூப்பர்ஸ்டார் எப்படி சொல்றாருன்னு பார்க்கலாமா…
கமல் பிரம்மாண்டமான ஆபீஸ். ராஜ் கமல் ஆபீஸ திறந்து வச்சிருக்காரு. அதுக்கு வந்து முதல்ல வாழ்த்துக்கள் தெரிவிச்சிக்;கிறேன். அரசியலுக்கு வந்தா கூட அவரு தாய்வீடான சினிமாவ வந்து விட மாட்டார்.
மறக்க மாட்டார். அவரு வந்து நடிக்கலன்னு சொன்னா கூட ராஜ்கமல் இண்டர்நேஷனல் வந்துட்டு நிறைய பிரம்மாண்டமான படங்களை வந்து எடுத்து நிறைய நிறைய புது டைரக்டர்ஸை எல்லாம் இண்டஸ்ட்ரிக்கு வந்து அறிமுகப்படுத்தணுங்கறதுக்காகவே அதை வந்து ஆரம்பிச்சி வச்சிருக்காரு. அது மட்டுமல்ல. அது வந்து கலை என்கிறது அவருக்குள்ள உயிர்.
Rajni-Kamal
அது வந்து என்ன எங்கே வந்து போனா கூட அதை மட்டும் மறக்கவே மாட்டார். எனக்கு நல்லா தெரியும். அவரோட கடைசி நாள்கள்ல வந்து படம் எடுத்தாலும் எடுக்கலேன்னாலும் வேற வேற துறையில இங்க எப்படி இருந்தாலும் இல்லேன்னாலும் இங்க வந்து டெபனைட்லி அவரு நேரத்தை வந்து சந்தோஷமா கழிப்பாங்கன்னு எனக்கு தெரியும்.
இந்த ராஜ்கமல் வந்து முதல்ல எடுத்த படம் வந்து ராஜபார்வை. அதை எடுக்கும்போது வந்து கம்ப்ளீட்டா கண்ணு இல்லாத மாதிரி நடிச்சிருப்பாரு. அது எடுத்துட்டு வந்த நேரத்துல வந்து சிவாஜி சாரை மீட் பண்ற சந்தர்ப்பம் எனக்கு கிடைச்சது. அப்ப வந்து சிவாஜி சார் என்னடா உன் நண்பன் வந்து ஒரு படம் எடுத்துக்கிட்டு இருக்கானாமே.
கண்ணே இல்லையாமே…தெரியுமா உனக்கு… ராஜபார்வைன்னு பேரு வச்சிருக்கான். உங்களுக் கெல்லாம் சொல்றவங்க யாருமே கிடையாதா…இதை அவருக்கிட்ட சொல்லுடா… அபசகுணம் மாதிரி….நான் எப்படிங்க அவருக்கிட்ட சொல்றது? நீங்களே சொல்லுங்க…! கேப்பாங்க.
Rajaparvai
நான் வந்து சொல்ல மாட்டேன்…அப்படின்னு சொல்லி அந்தப்படத்தையும் ஸ்டார்ட் பண்ணி அதுக்கு அப்புறம் அஞ்சாறு வருஷத்துக்கு அப்புறம் கழிச்சி டைரக்டர் ராஜசேகரை வச்சி விக்ரம்னு ஒரு படம் எடுத்தாரு. தம்பிக்கு எந்த ஊருன்னு நினைக்கிறேன்.
அந்தப்படம் கூட பண்ணிட்டு இருக்காரு. அந்தப்படம் பத்திப் பேச மாட்டாரு. விக்ரம் படம் பத்தியே பேசிக்கிட்டு இருப்பாரு. விக்ரம் பத்தியோ கமல் பத்தியோ ராஜசேகர் பேசிக்கிட்டு இருப்பாரு. இந்த மாதிரி புரொடியூசரை நான் பார்த்ததேயில்லை. ஒரு ஒரு நுணுக்கம்…கம்ப்ளீட்லி குண்டூசி…பேப்பர்ல இருந்து பிரமிச்சிப் போயிருந்தார்.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…