நெல்சனின் இயக்கத்தில் ரஜினியின் 169வது படமான ‘ஜெய்லர்’-ன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், ஐஸ்வர்யாராய் போன்றோர் நடிப்பதாக தகவல் வெளியானது.
பீஸ்ட் படத்தின் தோல்வியை அடுத்து ரஜினி படத்தை நெல்சன் இயக்குகிறார். ஆதலால் கூடுதல் எதிர்பார்ப்புகள் நெல்சனின் பக்கம் திரும்பியுள்ளது என்றே கூறலாம். அதுவும் அந்த படத்திற்கு பிறகு ஒவ்வொரு காட்சியையும் கவனமாக கையாளுவதாக தகவல் பரவியது.
சமீபத்தில் தான் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. இந்த நிலையில் ஜெய்லர் படத்தை பற்றி அன்றாடம் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இது ரஜினி படமாக இருக்காது. மல்டி ஸ்டார் படமாக இருக்கதான் வாய்ப்பு இருக்கிறது என கூறுகிறார்கள்.
ஒருபக்கம் சிவகார்த்திகேயன், இன்னொருபக்கம் கன்னட ஸ்டார் சிவராஜ், மறுபக்கம் ஐஸ்வர்யா ராய் என பல மொழி நட்சத்திரங்கள் நடிக்கும் படமாக இருக்கும். மேலும் ஃபிளாஸ்பேக் ரஜினியாக சிவகார்த்திகேயன் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கெனவே பேட்ட படத்தில் ஃபிளாஸ் பேக் ரஜினியாக ரஜியைத்தான் கொஞ்சம் மாறுதலாக காட்டியிருப்பார்கள். ஆனால் இது மல்டி ஸ்டார் படமாக இருப்பதால் சிவகார்த்திகேயன் காட்சியை இப்படி காட்ட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Cook with…
சர்ச்சை நாயகன்…
Ajith Vijay:…
OTT-யில் புதிய…
சிம்புவுடன் இணைந்த…