பீஸ்ட் திரைப்படத்தின் எதிரொலி இயக்குனர் நெல்சனை மிகவும் பாதித்துள்ளது.அதனால் அடுத்து தான் இயக்கவிருக்கும் தலைவர் 169 படத்திற்காக மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்புகள் எல்லாம் ஆரம்பிக்க பட்ட நிலையில் மிகவும் கவனமுடன் செயல் பட்டு வருகிறார்.
பீஸ்ட் படத்தில் செய்த தவறுகள் எதுவும் இந்த படத்தில் நடந்து விடக் கூடாது என்பதற்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறார். படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார் போன்ற நடிகர்கள் நடிக்கின்றனர்.
படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கான கதைகளையும் நெல்சன் ரஜினியிடம் கொடுக்க அதில் சின்ன சின்ன மாறுதல்களை கூறிய ரஜினி ஸ்கிரிப்ட்டில் மாற்றம் செய்து படப்பிடிப்பும் நடந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் படத்திற்கான தலைப்பை ரஜினியிடம் கொடுத்துள்ளார் நெல்சன்.கிட்டத்தட்ட 30 தலைப்புகளை கொடுத்துள்ளார். அதில் எதுலயும் செட் ஆகாத ரஜினி ‘ கிரிமினல் ‘ என்ற தலைப்பை மட்டும் எடுத்து அதையும் ஆப்ஷனாக வைத்துள்ளாராம். பொதுவாக எதிர்மறையான தலைப்புகளில் மக்கள் ஈர்த்து போவார்கள். அந்த வகையில் கிரிமினல் என்ற தலைப்பை இப்போதைக்கு எடுத்து வைத்துள்ளார்களாம் படக்குழு.
Vijay: தமிழ்…
Cook with…
சர்ச்சை நாயகன்…
Ajith Vijay:…
OTT-யில் புதிய…