Rajini 173:ரெண்டு பேருமே ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தவங்க.. ரஜினி பட வாய்ப்பு யாருக்கு போக போகுது?
ரஜினி 173 படத்தை யார் இயக்க போகிறார்? இதுதான் இப்போது கோலிவுட்டில் அனைவரும் கேட்கிற கேள்வி. முதலில் இந்த படத்தை சுந்தர் சி இயக்குவதாக இருந்தது. அதன் பிறகு சுந்தர் சி இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் ரஜினியும் கமலும் இணைய மாட்டார்களா? அந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு நமக்கு வராதா என பல இயக்குனர்கள் காத்துக் கொண்டிருக்க அவர்கள் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் அவர்கள் இருக்கும் படத்தில் வாய்ப்பு வந்தும் சுந்தர் சி விலகினார்.
அவர் விலகியது பல வித சந்தேகங்களை ஏற்படுத்தியது. சம்பளம் அதிக கேட்டார் சுந்தர்சி. ராஜ்கமல் நிறுவனம் அதை தர மறுத்தது என்றெல்லாம் செய்திகள் வெளியானது. ஆனால் உண்மையிலேயே சுந்தர் சி சொன்ன கதைதான் ரஜினிக்கு பிடிக்கவில்லை . இதை கமலே விமான நிலையத்தில் என் ஹீரோவுக்கு பிடிக்காத கதையை நான் பண்ண மாட்டேன் என மறைமுகமாக சொன்னதில் இருந்தே சுந்தர் சி சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்தது.
அதிலிருந்தே ரஜினிக்காக கதையை கமல் தேடி வந்தார். இதற்கிடையில் புது முகங்களுக்கும் வாய்ப்பு உண்டு என்று தெரிவித்தார் கமல். இந்த சூழ் நிலையில் ரஜினி 173 படம் கமல் தயாரிக்கிறார். அதனால் சும்ம ஒரு கதையை செய்துவிட முடியாது. ஒரு ஜனரஞ்சகமான படமாக இருக்க வேண்டும் என்பதில் கமல் உறுதியாக இருந்தார். இதனால் கதையை வெளியில் வாங்கலாமா என்று முடிவு செய்து நாவலாசிரியர் ராஜேஷ்குமாரிடம் அணுகினார் கமல்.

அவர்தான் இந்தப் படத்திற்காக கதை எழுத போகிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அப்போ யார் இயக்க போகிறார் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் இன்று சோசியல் மீடியாவில் ரஜினி 173 படத்திற்காக இரு இயக்குனர்களிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. ஒன்று மகாராஜா படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமி நாதன் , மற்றொருவர் பார்க்கிங் பட இயக்குனரான ராம்குமார் பாலகிருஷ்ணன்.
இந்த இரு இயக்குனர்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல ஒரு செல்வாக்கு இருக்கிறது. இருவருமே ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தவர்கள்தான். அதனால் இருவரில் ஒருவர் கண்டிப்பாக ரஜினி படத்தை இயக்குவார்கள் என்று சொல்லப்படுகிறது.
