நடிகரா இருக்கிறவங்க கல்யாணம் பண்ணிக்கலாமா? கூடாதா? ரஜினி சொன்ன பதில்

by Rohini |
rajiin
X

நடிகர் ரஜினி: தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 50 வருடமாக இந்த தமிழ் சினிமா உலகில் ஒரு சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கின்றார் ரஜினிகாந்த். தமிழ்நாடு அவருடைய பூர்வீகம் இல்லை என்றாலும் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் தலைவராக திகழ்ந்து வருகிறார். ரசிகர்களுக்காக தொடர்ந்து படங்களை கொடுக்க வேண்டும் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதுதான் அவருடைய முழு நேர வேலையாக இருக்கிறது.

ரஜினி பயோபிக்: நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் ஆன்மீகத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஆன்மீக ரீதியாக அவரை ஒரு குருவாகவே அனைவரும் பார்த்து வருகிறார்கள். அவருடைய எண்ணமும் செயலும் அனைவரையும் வியப்பிற்குள்ளாகி இருக்கிறது. அவருடைய அறிவுரைகள் இன்றைய இளைஞர்களுக்கு தேவைப்படும் அளவில் தான் இருக்கிறது .அந்த அளவுக்கு தன் வாழ்க்கையில் அவர் பட்ட கஷ்டம் போராட்டம் அவர் செய்த தியாகம் என அனைத்துமே இன்றைய இளைஞர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். அவருடைய பயோபிக்கை படமாக எடுத்தால் கூட ஒரு வகையில் உதவியாக இருக்கும் என்று சொல்லலாம் .

நன்றி மீண்டும் வருக: இந்த நிலையில் மவுலி ரஜினி பற்றி ஒரு பழைய பேட்டி ஒன்றில் கூறியது வைரலாகி வருகின்றது. மவுலியை பொறுத்த வரைக்கும் கமலுடன் தான் அதிகம் பழக்கமுடையவர். ரஜினிகாந்தை பற்றி அந்த அளவுக்கு தெரியாது. அவருடன் நட்பும் கிடையாது .மௌலி இயக்கத்தில் பிரதாப் போத்தன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் நன்றி மீண்டும் வருக.. இந்த படம் 1982 ஆம் ஆண்டு வெளியானது .இதில் ஜெய்சங்கர், பிரதாப் போத்தன், சுகாசினி, தேங்காய் சீனிவாசன் என எண்ணற்ற நடிகர்கள் நடித்திருந்தனர். இதில் ரஜினிகாந்த் மற்றும் சில்க் ஸ்மிதா கௌரவ வேடத்தில் நடித்திருந்தனர்.

ரஜினியின் டையலாக்: இந்த படத்தின் ஒரு காட்சியில் ரஜினி ஒரு நடிகராகவே திருமணத்தைப் பற்றி பிரதாப் போத்தனுக்கு ஒரு அட்வைஸ் ஆக சில வசனங்களை பேச வேண்டும். அப்போதுதான் ரஜினிக்கு திருமணம் ஆன புதிது. அதனால் அந்த காட்சியில் யாரை நடிக்க வைக்கலாம் என மவுலி தனது பட குழுவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது ரஜினியை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் .ஏனெனில் ஒரு நடிகராக இப்போதுதான் திருமணம் செய்து இருக்கிறார். அதனால் நடிகர் திருமணம் செய்தால் மார்க்கெட் போய்விடும் என்கிறார்கள். அது உண்மையா பொய்யா என்பதை பற்றி விளக்கும் வசனம் தான் அது. அதை ரஜினி பேசினால் நன்றாக இருக்கும் என படக் குழு நினைத்திருக்கிறார்கள்.

இரண்டே மணி நேரத்தில் நடந்த மேஜிக்: அந்த நேரத்தில்தான் இந்த படப்பிடிப்பு நடந்த அதே ஸ்டூடியோவில் எதிரே ரஜினியின் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. அவரிடம் மௌலியும் பிரதாப் போத்தனும் இந்த மாதிரி நடிக்க வேண்டும் என கேட்டு இருக்கிறார்கள். அதற்கு ரஜினி நல்ல ஐடியாவாக இருக்கிறது .இதை என்னுடைய வீட்டிலேயே ஷூட்டிங் வைத்துக் கொள்ளலாம் எனக் கூறி அவர் நடித்து கொண்டிருந்த படத்தின் ஷாட்டை முடித்ததும் பிரதாப் போத்தனையும் மௌலியையும் தன்னுடைய பைக்கிலேயே ஏற்றிக்கொண்டு ரஜினி அவர் வீட்டிற்கு சென்று விட்டாராம். பிசி ஸ்ரீ ராம் தான் அந்த படத்தின் ஒளிப்பதிவாளர். அவரையும் அழைத்துக் கொண்டு சென்று இருக்கிறார்கள் .

இந்த படத்தை பற்றி பேசிய இரண்டு மணி நேரங்களிலேயே ரஜினியை வைத்து நன்றி மீண்டும் வருக படத்தின் அந்த காட்சியை படமாக்க தொடங்கி இருக்கின்றனர். அந்த காட்சியில் ரஜினி பிரதாப் போத்தனிடம் ‘உன்னுடைய எடை எவ்வளவு என கேட்பார். அதற்கு பிரதாப் போத்தன் 140 பவுண்டு எனக் கூறுவார். ரஜினி தன்னுடைய எடையை 160 பவுண்டு எனக் கூறுவார். அதன் பிறகு 160 பவுண்டு எடையை உன்னால் தூக்க முடியுமா எனக் கேட்டால் உடனே பிரதாப் போத்தன் ரஜினியை தூக்கி காட்டுவார்.


சரி 140 பவுண்டு எடையை தூக்க முடியுமா என ரஜினி கேட்பார். அதற்கு போத்தன் 160 பவுண்டு எடையே தூக்கி விட்டேன். 140 பவுண்டு எடையை தூக்க முடியாதா எங்க இருக்கு சொல்லுங்கள் தூக்கி காட்டுகிறேன் எனக் கேட்பார். அதற்கு ரஜினி நீதான் இருக்கியே .உன்னையே நீ தூக்கு என சொல்வார் .அதற்கு போத்தன் நான் என்னையே எப்படி தூக்க முடியும். ஏதாவது ஒரு கைப்பிடி இருந்தால் அதைப் பிடித்துக் கொண்டு தூக்கி காட்டுவேன் என கூறுவார் .அதற்கு ரஜினி இப்ப புரியுதா வாழ்க்கையில் ஒரு பிடிமானம் வேணும். அதுதான் திருமணம் என அந்த வசனத்தை சொல்லி முடிப்பார். இந்த சீனை தான் ரஜினியை வைத்து இந்த படத்தில் எடுத்திருப்பார்கள்.

Next Story