×

சொத்துக்களை வாரி வழங்கிய பாலம் கல்யாணசுந்தரமாக ரஜினிகாந்த்

நீங்கள் எனக்குத் தந்தையாக என்னோடு இருக்க வேண்டுமென போயஸ் கார்டன் இல்லத்திற்கு பாலம் கல்யாணசுந்தரத்தை அழைத்துச் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்.

 
90fc1a8b-09d2-43f5-96b6-90f7c6200b2c

பாலம் கல்யாணசுந்தரம் வாழ்க்கை வரலாறு தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் படமாக வெளியாக உள்ளது. இதில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக அன்பு பாலம் என்ற புத்தகத்தில் பாலம் கல்யாணசுந்தரம் எழுதியுள்ளார். 

பாலம் கல்யாண சுந்தரம் தான் வைத்திருந்த சொத்துக்களை ஏழை மக்களுக்கு எழுதி கொடுத்தவர் என்று அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் அதனை தெரிந்துகொண்டு அவரை தனது தந்தையாக தத்தெடுத்தவர் நடிகர் ரஜினிகாந்த்.

rajni

1999-ம் ஆண்டு காமராஜர் அரங்கில் நடைபெற்ற பாலம் கல்யாண சுந்தரம் அவர்களின் பாராட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற அப்பொழுது இதுபோன்ற ஒரு மனிதரை பார்ப்பதே கடினமான ஒன்று என கூறினார் தான் வாழும் போதே தன் சொத்துக்களை எழுதி தரும் மகானுக்கு நான் மகனாக வேண்டும் என மேடையிலேயே அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். எனக்கு 2 மகள்கள் உள்ளனர். 

ஆனால் தந்தை இல்லை. எனவே நீங்கள் எனக்குத் தந்தையாக என்னோடு இருக்க வேண்டுமென போயஸ் கார்டன் இல்லத்திற்கு பாலம் கல்யாணசுந்தரத்தை அழைத்துச் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்.

ஆனால் பல்வேறு காரணங்களால் அவருடைய வீட்டிலிருந்து  வேறு பகுதிக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வாக பாலம் கலியாணசுந்தரம் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார் விரைவில் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
rajni

From around the web

Trending Videos

Tamilnadu News