×

ரஜினி கட்சியுடன் கூட்டணியா? ராமதாஸ் பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அரசியல் கட்சி தொடங்குவார் என்றும் ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசுவார் என்றும் செப்டம்பர் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்வார் என்றும் ரஜினியின் அரசியல் ஆலோசகர் என்று கூறப்படும் தமிழருவி மணியன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தெரிவித்தார்.

 

அதுமட்டுமின்றி ரஜினி கட்சியுடன் பாமக கூட்டணி அமைக்கும் என்றும், டிடிவி தினகரனின் அமமுக கட்சியுடன் ரஜினி கட்சி கூட்டணி அமைக்காது என்றும் அவர் தெரிவித்தார். தமிழருவி மணியனின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் தமிழருவி மணியனின் இந்த கருத்துக்கு பாமக தலைவரிடமிருந்து எந்தவிதமான ரியாக்ஷனும் இதுவரை வராமல் இருந்த நிலையிலும் கூட அரசியல் விமர்சகர்கள் இதுகுறித்து கேள்வி மேல் கேள்வி எழுப்பினார்கள்

இந்த நிலையில் தற்போது இதுகுறித்து பாஜக தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் விளக்கமளித்துள்ளார். ரஜினி கட்சி ஆரம்பித்தால் கூட்டணி குறித்து பேசுவோம் என யோசிக்கிறேன் என்றும், ரஜினி கட்சி தொடங்கட்டும் அதன்பின் பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்

ரஜினி கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று டாக்டர் ராமதாஸ் உறுதியாக கூறவில்லை என்பதால் ரஜினி கட்சியுடன் பாமக கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 

From around the web

Trending Videos

Tamilnadu News