Categories: Cinema News latest news

அசுரன் வித் அண்ணாத்த!.. காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்…

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமா உலகில் அவரை சேவையை பாராட்டி அவருக்கு தாதா சாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று காலை நடந்த 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் அந்த விருது ரஜினிக்கு வழங்கப்பட்டது. எனவே, அவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல், நடிகர் தனுஷுக்கு அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

தாதா சாகேப் விருதை தனது குருநாதர் பாலச்சந்தருக்கு சமர்பிப்பதாக ரஜினி கூறினார். மேலும், தனக்கு உதவிய நண்பர்கள், தன்னை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், படக்குழுவினர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.

அதேபோல், விருது பெற்ற மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட தனுஷ் ‘ சூப்பர்ஸ்டார் ரஜினி சார் விருது பெரும் இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பெறுவது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது’ என அவர் தெரிவித்திருந்தார்.

தற்போது இவரும் கையில் விருதை வைத்துக்கொண்டு நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா