×

ரஜினியும் கமலும் இதுல மட்டும் ஒண்ணு – அடுத்த படத்தில் புக்கான உலகநாயகன் !

நடிகர், கமல் அடுத்ததாக வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 

நடிகர், கமல் அடுத்ததாக வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் கமல் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை ஆரம்பித்து மக்களவைத் தேர்தலையும் சந்தித்து விட்டார். இப்போது தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளதால் இனி சினிமாவுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்று அவர் கூறியிருந்தார். ஆனாலும் இந்தியன் 2, தலைவன் இருக்கின்றான் ஆகிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால், அரசியலில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். இதற்கான கதையை சமீபத்தில் கவுதம் மேனன் கமலிடம் சொல்லி ஓகே வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.

இந்த படத்தை கமல் மற்றும் கவுதம் மேனன் ஆகியோரின் நெருங்கிய நண்பரான ஐசரி கணேஷ் தயாரிப்பார் எனத் தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News