Categories: Cinema News latest news

அமேசான் பிரைமில் இருந்து நீக்கப்படும் ரஜினி, விஜய் படங்கள்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…..

அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் புதிதாக வெளியாகும் படங்களை மட்டுமல்லாமல் ஏற்கனவே வெளியான படங்களின் ஓடிடி உரிமையையும் கைப்பற்றி அமேசான் பிரைமில் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இருந்து ரஜினி மற்றும் விஜய் படங்களை அமேசான் பிரைம் நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி விஜய் மற்றும் ரஜினி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான தெறி மற்றும் கபாலி ஆகிய இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றன. அதேபோல் இந்த இரண்டு படங்களையுமே தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் தற்போது அமேசான் பிரைம் தளத்தில் உள்ளது.

vijay

இந்நிலையில் தெறி படம் இன்னும் 4 நாட்களும், கபாலி படம் இன்னும் 9 நாட்களும் மட்டுமே அமேசான் பிரைமில் இருக்கும் என்றும், அதன் பின் நீக்கப்படும் எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கான காரணத்தையும் அமேசான் பிரைம் நிறுவனம் கூறியுள்ளது.

அதாவது இந்த இரண்டு படங்களுமே வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதாம். மேலும் இந்த இரண்டு படங்களின் ஓடிடி ஒளிபரப்பு உரிமையும் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே அமேசான் பிரைமிற்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தற்போது இப்படங்களை நீக்குவதாகவும் அமேசான் நிறுவனம் கூறியுள்ளது.

rajini

தெறி மற்றும் கபாலி படங்கள் அமேசான் பிரேமில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் நெட்ப்ளிக்ஸ் அல்லது சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் பேவரைட் படங்கள் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்படுவது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

adminram
பி.எஸ்.ஸி. பட்டதாரியான இவர் 17 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும்அரசியல் குறித்த செய்திகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 10 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி மர்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை கவனித்து வருகிறார்.
Published by
adminram