Categories: Cinema News latest news

ரஜினிக்கு இம்புட்டு கோபம் வருமா? பத்திரிகையாளர்களிடம் கொந்தளித்த ரஜினி….

கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் குறித்து ஒரு தகவல் ஒன்றை பிரபல நடிகர் ஒருவர் பகிர்ந்துள்ளார். அதாவது நடிகர் ரஜினிகாந்திற்கு பயங்கரமாக கோபம் வருமாம். அப்படி ஒருமுறை அவர் கோபப்பட்டு பத்திரிகையாளர்களிடம் பேசிய சம்பவம் ஒன்றை தற்போது பகிர்ந்துள்ளார்.

நடிகர் ரஜினி மற்றும் அவரது மனைவி லதா ஆகிய இருவரும் காதலித்து கடந்த 1981 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த உடனே ரஜினி அவரின் குருவான இயக்குனர் பாலச்சந்தரிடம் தான் இந்த செய்தியை முதலில் கூறியுள்ளார்.

rajini

பின்னர் இயக்குனர் பாலச்சந்தரின் ஆசிபெற்று இருவரும் திருப்பதியில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இந்த தகவலை பத்திரிகையாளர்களிடம் தெரிவிப்பதற்காக ரஜினி பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

அதில் எங்கள் திருமணம் திருப்பதியில் நடக்க இருக்கிறது. அதில் அனைவரும் கலந்துகொள்ள இயலாது. ஏனென்றால் கோயிலில் அனைவருக்கும் அனுமதி அளிக்க முடியாது. எனவே நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். மீடியாவை சார்ந்த அனைவருக்கும் எங்கள் திருமண புகைப்படம் அனுப்பி வைக்கப்படும் என ரஜினி கூறினார்.

rajini-latha

அப்போது கூட்டத்தில் இருந்த பத்திரிகையாளர் ஒருவர் இதையும் மீறி நாங்கள் உங்கள் திருமணத்திற்கு வந்தால் என்ன செய்வீர்கள் என கேட்டார். உண்மையாகவே இந்த கேள்வி ரஜினியை சற்று ஆத்திரப்படுத்தி விட்டது. இதனால் கோபப்பட்ட ரஜினி அப்படி வந்தால் நான் அவர்களை சுட்டுவிடுவேன் என்றார்.

இந்த பதிலை கேட்டு அங்கிருந்தவர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்பு கோபத்தை கட்டுப்படுத்திய ரஜினி மன்னிச்சிடுங்க சற்று கோபம் அடைந்து விட்டேன், நான் அவ்வாறு பேசியிருக்கக்கூடாது என்றாராம். இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் ரஜினிக்கு இம்புட்டு கோபம் வருமா என மிகவும் அதிர்ச்சியில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்